Friday, August 3, 2012

அந்த சில வினாடிகளே அற்புதமானவை...- ஸ்டெப்பர்


ஸ்டெப்பர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிறந்தவர். புகைப்படம் எடுப்பதற்காக கிட்டத்தட்ட 62 நாடுகளுக்கு பறந்தவர்.

ஹெய்தி செல்லும்போது அங்கு பயங்கர கலவரம் நடைபெற்றது, அதனால் திரும்பிப் போகும்படி அங்குள்ள காவல்துறை அதிகாரிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டார். இல்லை பராவாயில்லை, என்னதான் நடக்கிறது என்று பார்க்கிறேனே என கேமிராவும், கையுமாக ஊருக்குள் சென்றவருக்கு பல ஆபத்துகளை தாண்டி அற்புதமான படங்கள் கிடைத்தது. அதன் பிறகு ஹெய்தியில் நீண்டகாலம் தங்கியிருந்து நிறைய படங்கள் எடுத்தார்.

புகைப்படங்கள் தொடர்பான பல உயர் விருதுகள் கிடைத்துள்ளது, நிறைய புகைப்பட கண்காட்சிகள் நடத்தியுள்ளார். புகைப்படங்கள் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்று நிறைய பேரை புகைப்படக்கலையின் பக்கம் திருப்பிவிட்டுள்ளார்.

போட்டோகிராபி என்பது அந்த சில வினாடிகளில் நடக்கும் அற்புதங்களை பதிவு செய்வதுதான், அந்த சில வினாடி என்பது எந்த சில வினாடி என்பதில்தான் போட்டோகிராபரின் திறமை அடங்கியிருக்கிறது. இந்த ஜீவனுள்ள கலையை யாராலும் அழிக்கமுடியாது. புதிய, புதிய வடிவமைப்பில் மக்களின் ஆதரவோடு அமோகமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது இவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.

நன்றி 

தினமலர்