Monday, February 28, 2011

தி.மு.க., - காங்., தொகுதி பங்கீட்டில் இறுக்கம்


தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் தலைமை ஏற்படுத்தியுள்ள ஐவர் குழுவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட தகவல்களை காங்கிரஸ் டில்லி தலைமையுடன் பகிர்ந்து கொள்ள தி.மு.க., முடிவு செய்துள்ளது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும், தற்போது நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் தி.மு.க., சிறந்த நண்பனாகவே இருந்து வருகிறது. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., - ம.தி.மு.க., போன்றவை தி.மு.க.,வுடன் முரண்பாடு ஏற்பட்டு வெளியே சென்றபோதும், தி.மு.க., - காங்கிரஸ் உறவில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. இலங்கைப் பிரச்னையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்ட போதும், காங்கிரசுடன் விரிசல் ஏற்படாமல் தி.மு.க., பார்த்துக் கொண்டது. தமிழக சட்டசபை தேர்தலை காங்கிரசுடன் இணைந்து சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே தி.மு.க., இத்தகைய பொறுமையை கடைபிடித்து வந்தது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியதும், இந்த போக்கில் மாறுதல் ஏற்பட்டு, விரிசல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.


பொதுவாக, தமிழகத்தில் கூட்டணிக் கட்சியிடையே தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்படும்போது, காங்கிரசின் தலைமை தலையிட்டு பிரச்னையைத் தீர்க்கும். ஆனால், இந்த முறை, பேச்சுவார்த்தையின் ஆரம்பம் முதலே, டில்லி காங்கிரஸ் தலைமை தலையிடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. பேச்சுவார்த்தையில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தொகுதிகள் பற்றி குறிப்புகளுடன் பேசியதும், கூட்டணி அரசுக்கு அடிப்படையாக கருத்துக்களை வலியுறுத்தியதும், தி.மு.க., தரப்பில் இறுக்கம் அதிகமானதற்கு காரணம் என்று தெரிகிறது. மேலும், கடந்த வெள்ளிக் கிழமை அறிவாலயத்தில் நடந்த பேச்சுக்களில் முடிவு இழுபறியானதற்கு அடையாளமாக, அந்தக் கட்டடத்தில் தன் அறையில் அமர்ந்திருந்த முதல்வர் இக்குழுவினரைச் சந்திக்கவில்லை.


தற்போது, காங்கிரஸ் அதிகபட்சமாக போட்டியிடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற தகவலை, கட்சித் தலைவர் சோனியா மற்றும் பொதுச் செயலர் ராகுலுக்கு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை தி.மு.க.,வுடன் பேசிய அணுகுமுறையில் இருந்து சற்று வேறுபாடாக சிதம்பரம் தலைமையிலான குழு வைக்கும் கோரிக்கைகள், தி.மு.க.,வுக்கு சற்று அதிருப்தியை தந்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு விட முடியாத நிலை உள்ளது.இனி மேலிடப் பிரதிநிதியாக குலாம் நபி ஆசாத் வரலாம் என்ற பேச்சு இருக்கிறது. அதேசமயம் டில்லி தலைமையோ, தி.மு.க., பிரதிநிதிகளை சந்திப்பதையே தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. டில்லியில் சோனியா அரசியல் ஆலோசகரை மட்டுமே டி.ஆர்.பாலு சந்திக்க முடிந்தது.


நன்றி

தினமலர்

Sunday, February 27, 2011

தி.மு.க., ஆட்சி தொடரும்; நானும் இருப்பேன்: கருணாநிதி உறுதி


சென்னை: ""மக்கள் ஆதரவுடன் தி.மு.., ஆட்சியும் தொடரும்; நானும்இருப்பேன். திட்டப்பணிகளும் தொடரும். ஆறு ஆண்டுகளில் தமிழகம்குடிசைகள் இல்லாத முதல் மாநிலமாக மாறும் ,'' என முதல்வர் கருணாநிதிபேசினார் .


சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., சேகர்பாபு ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணையும் விழா தண்டையார்பேட்டையில் நேற்று மாலை நடந்தது. இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: வடசென்னை பகுதி தி.மு.க., துவங்கிய இடம். அன்று பலரால் இட்ட விதை இன்று மரமாகி அதன் நிழலில் நாம் உள்ளோம். எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., கப்பல் திசை மாறி செல்கிறது. திசை மாறும் கப்பலில் இருக்க வேண்டாம். என சேகர்பாபு வந்துவிட்டார். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருக்க தகுதியில்லை; அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்குங்கள் என சொன்னவர் தான் இந்த அம்மையார்.


தமிழகத்தில் எத்தனையோ பிரச்னை இருந்தாலும், தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டது. யாருக்கு எத்தனை இடங்கள்; எந்தெந்த தொகுதிகள் என கட்சித்தலைவர்கள் பேசி முடிவெடுத்து, தொகுதியை அடையாளம் காட்டி, பேசும் காலமாக உள்ளது. மக்களாட்சி தத்துவத்தை உணர்ந்து மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, குறைந்தவிலைக்கு சமையல் பொருட்கள் கொடுத்து ஏழைகளின் வயிற்றுப்பசியை தீர்க்கும் ஆட்சியை நடத்துகிறோம். தமிழகத்தில் குடிசை இல்லா மாநிலமாக்க குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாறும். அதுவரை நான் இருப்பேனா என்பீர்கள். நீங்கள் இருக்கும்போது நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும். துவக்கிய எல்லா திட்டங்களும் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


நன்றி


தினமலர்


Saturday, February 26, 2011

சுறுசுறுப்பாகும் தே.மு.தி.க., தொண்டர்கள்; சூடுபிடிக்கும் தேர்தல் பணி

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதால், தேர்தல் களத்தில் திசை தெரியாமல் சுற்றித் திரிந்த தே.மு.தி.க., தொண்டர்கள், தற்போது சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.


தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தி.மு.க., தரப்பில், பா.ம.க.,விற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டிற்கு, ஐவர் குழுக்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.அ.தி.மு.க., தரப்பில், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன், தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது.இப்படி தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில் கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடும் முடியும் சூழ்நிலையில், தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதில், அக்கட்சியின் தலைமை தொடர்ந்து மவுனம் காத்து வந்தது.


தேர்தலையொட்டி, பல இடங்களில் தி.மு.க., கூட்டணியினர் சுவர் விளம்பரம், வாக்காளர் கவனிப்பு என, களத்தை சூடுபடுத்தி வரும் நிலையில், யாருடன் கூட்டணி எனத் தெரியாமலும், தேர்தல் பணியில் இறங்க முடியாமலும் தே.மு.தி.க., தொண்டர்கள் தவித்து வந்தனர்.வரும் தேர்தலில் தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் இருந்தனர். கடைசிக்கட்ட சூழ்நிலையில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்படுமோ எனவும் எண்ணியிருந்தனர்.இப்படி கூட்டணி, "டென்ஷன்' தொடர்ந்ததால், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட முடியாமல் குழப்பத்தில் இருந்தனர்.


இந்நிலையில், கூட்டணி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று முன்தினம் தே.மு.தி.க., - அ.தி.மு.க., கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில், மூவர் குழுக்கள் அடங்கிய முதல் கட்ட பேச்சு நடந்தது. இந்த பேச்சு இருதரப்பினரிடையேயும் சுமூகமாக முடிந்துள்ளது. அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தது போலவே கூட்டணி உறுதியாகிவிட்டதால், அவர்கள் தற்போது தேர்தல் களத்தில் சுறு, சுறுப்பாகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து தேர்தல் பணியாற்ற ஆயத்தமாகிவிட்டனர்.

Friday, February 25, 2011

"80 கேட்டால் 48 தான் தர முடியும் என்பதா?': தி.மு.க., பார்முலாவை ஏற்க சோனியா மறுப்பு


"சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 48 "சீட்'கள் வழங்கப்படும்; ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கையை தேர்தலுக்குப் பின் பரிசீலிக்கலாம்' என்ற தி.மு.க.,வின் திட்டத்தை, காங்கிரஸ் ஏற் மறுத்து விட்டது. 80 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்ட நிலையில், 48 தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்தது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட முடிவெடுக்க, முன்னணி நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.

"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும்; குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்க வேண்டும்; அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும்' என, தி.மு.க.,வுடன் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க., மறுப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து காங்கிரசின் ஐவர் குழு உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் சோனியாவிடம் விளக்கினர். தி.மு.க.,வின் நிலை குறித்து, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மூலம் சோனியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, "காங்கிரசுக்கு கூட்டணியில் 48 தொகுதிகள் வழங்கப்படும். கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணியில் இல்லாததால், கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட 23 தொகுதிகள் கைவசம் உள்ளன. இதில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் வழங்கியது போக, மீதமுள்ள இடங்கள் காங்கிரசுக்கு கொடுக்கப்படும். ஆட்சியில் பங்கு குறித்த பேச்சு தற்போது எழவில்லை. தேர்தலுக்கு பின்னர் அவசியம் ஏற்படும்போது, அது குறித்து பேசிக் கொள்ளலாம்' என்று, சோனியாவிடம் தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரசுக்கு 80 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்திய நிலையில், 48 தொகுதிகள் மட்டும் ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்ததால் காங்கிரஸ் கோபமடைந்துள்ளது. எனவே, புதிய மாற்றுத் திட்டத்துடன் அணுகுமாறு தி.மு.க.,வை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் சென்னையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரும், தி.மு.க.,வின் தென் மண்டல பொறுப்பாளருமான அழகிரி, தென் மாவட்டங்களின் சார்பில், தி.மு.க.,வின் நிலையை முதல்வரிடம் தெரிவித்தார். அப்போது, கடந்த ஐந்தாண்டுகளில் அரசின் திட்டங்களால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு, கூட்டணிக் கட்சிகளினால் ஏற்படும் கூடுதல் பலம் ஆகியன குறித்து கட்சி தலைமையிடம் விவரித்தார். வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய மாவட்டச் செயலர்களுடன், துணை முதல்வர் ஸ்டாலின் கருத்து கேட்டார். இதுதவிர, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கருத்துக்களையும் ஸ்டாலின் கேட்டார். இந்த ஆலோசனைகள் மூலம், காங்கிரஸ் கேட்டுள்ள புதிய மாற்றுத் திட்டத்தை தி.மு.க., வகுத்து வருகிறது. இத்திட்டம், காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்குமா? என்பது விரைவில் தெரியும். மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணியை முறித்துக் கொள்வது தி.மு.க.,விற்கு சாதகமாக இருக்காது என்பதால், கூட்டணியை தொடருவதற்கான முயற்சிகளை தி.மு.க., எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


நன்றி

தினமலர்

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கைகோர்ப்பு: கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது

சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணிஅமைத்துள்ளது. தே.மு.தி.க., நிர்வாகிகள்பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தர்ராஜன்ஆகியோர், நேற்று மாலை அ.தி.மு.க., தலைமைஅலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகிகளைசந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்டபேச்சுவார்த்தை நடத்தினர்.


அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறும் என, ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் வகையில், இரு கட்சி நிர்வாகிகளும், திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். முதல் முறையாக, நேற்று நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்தது. தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று மாலை 5.30 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதன்பின், இரு கட்சி நிர்வாகிகளும் 6.45 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்கிருந்து தே.மு.தி.க., நிர்வாகிகள் புறப்படும்போது, பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் விரும்பியபடி, இரு கட்சிகளும் சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. வரும் தேர்தலில், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஓரணியில் திரண்டு இந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில், விஜயகாந்த் பெரிதும் அக்கறை காட்டினார். மக்களின் விருப்பமும் நிறைவேறி உள்ளது. இந்தக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. இரு கட்சியினரும், இன்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மீண்டும் பேசி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம். வரும் தேர்தலில், ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் நிறைவேறும் வகையிலும், மக்கள் உணர்வுக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும், மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற எண்ணம், அ.தி.மு.க., தலைமைக்கும், விஜயகாந்துக்கும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது. இது மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி, என்றார்.


பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:


* ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
ஆட்சியில் இடம்பெறும் ஆசையில்லை.


* அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது?
விரைவில் பேசுவோம்.


* எத்தனை இடங்கள் கேட்டிருக்கிறீர்கள்?
பேசி முடிவெடுப்போம்.


* இதுவரை, "மக்களுடன் கூட்டணி; தெய்வத்துடன் கூட்டணி' என்று மட்டுமே விஜயகாந்த் கூறி வந்தார். தற்போது அ.தி. மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே?
மக்கள் குரலே மகேசன் குரல். இந்த ஆட்சியை ஒழித்துக்கட்டி புதிய ஆட்சி மலர, மக்கள் குரலும், தெய்வத்தின் குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. அதன்படி தான், இந்த கூட்டணி அமைந்துள்ளது. விஜயகாந்த், ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பினார். அதை, கார்டனில் வழங்கியுள்ளோம். தொகுதி பங்கீடு முடிவை, இரு தலைவர்களும் ஒன்றாக அறிவிப்பர். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.


நன்றி

தினமலர்


Thursday, February 24, 2011

அ.தி.மு.க., கூட்டணி இழுபறி: பின்னணி என்ன?


அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவதிலும், ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இறுதி வடிவம் பெறுவதிலும் இழுபறி நீடிப்பதற்கு, "தேய்பிறை' ஒரு காரணமாக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கையை பங்கிடுவதில் கூட்டணிக் கட்சிகளுக்குள் திருப்தி ஏற்படவில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது.


அ.தி.மு.க., அணியில் புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய ஐந்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. இதில், புதிய தமிழகம் கட்சி மற்றும் நடிகர் கார்த்திக் தலைமையில் இயங்கி வரும் அகில இந்திய நாடாளும் கட்சியும் அ.தி.மு.க.,விடம் ஒன்பது தொகுதிகளை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளன.


கூட்டணியில் பிரதான கட்சியாக ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டனர். ஆனால், தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டவில்லை. இதற்கு காரணம், ம.தி.மு.க., தரப்பில் கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கியது போல் 35 தொகுதிகளை அக்கட்சி பிடிவாதமாக கேட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில் 18 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளையும் கேட்டுள்ளன. அ.தி.மு.க., தரப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளையும் ஒதுக்க முன்வந்துள்ளது.


தே.மு.தி.க.,வை பொறுத்தவரையில் 41 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க அ.தி.மு.க., முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறது? தி.மு.க.,விடம் எத்தனை தொகுதிகளை அக்கட்சி பெறவுள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொண்ட பின், தே.மு.தி.க., தனது இறுதி முடிவை அறிவிக்கவுள்ளது.தி.மு.க., அணியில் இடம் பெற்ற பா.ம.க.,வுக்கு வெறும் 4 சதவீதம் ஓட்டுக்கள் தான் உள்ளன. ஆனால், திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை 10 சதவீதம் ஓட்டுக்கள் வைத்திருக்கும் தே.மு.தி.க.,விற்கு 60 தொகுதிகளை அ.தி.மு.க., தர வேண்டும் என, தே.மு.தி.க., விரும்புகிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு இணையாக தனது கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதிலும் தே.மு.தி.க., உறுதியாக உள்ளது.


தி.மு.க., அணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, காங்கிரஸ் வெளியேறுமானால் அக்கட்சியுடன் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடவும் தே.மு.தி.க., தயாராகவுள்ளது.தேர்தல் முடிவுக்கு பின், எந்த அணியை ஆதரிப்பது என்பதை முடிவு செய்யலாம் என்ற கணக்கையும் தே.மு.தி.க., கணித்துள்ளது. இரண்டு திராவிட கட்சிகளையும் புறக்கணித்து விட்டு, தனித்து நிற்கும் போது தான் 10 சதவீத ஓட்டுக்கள் தே.மு.தி.க.,விற்கு கிடைத்தது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்று மாலை 3 மணிக்கு விஜயகாந்த் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது.


கடவுள் நம்பிக்கை, ஜோதிடம் மீது அதீத நம்பிக்கையை வைத்திருக்கும் விஜயகாந்த், தற்போது நடந்து வரும் தேய்பிறையில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டார் என அவரது கட்சியினரும் நம்புகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் தனது கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தே.மு.தி.க., விதிப்பதால் தான் கூட்டணி இறுதி வடிவம் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.தேய்பிறை முடிந்ததும், கூட்டணிக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளின் எண்ணிக்கையை நியாயமாக ஒதுக்கீடு செய்வதற்கு அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அ.தி.மு.க., அணியில் ஒதுக்கீடு பெற்ற கட்சிகள் விவரம்


1.புதிய தமிழகம் 2
2.இந்திய குடியரசுக் கட்சி 1
3.அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் 1
4.மனித நேய மக்கள் கட்சி 3
5.அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1

நன்றி

தினமலர்


Wednesday, February 23, 2011

தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை : சோனியாவிடம் நேரில் பேச தி.மு.க., திட்டம்

சென்னை : தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்குமுன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழுஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவிதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில்சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில்சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராகடி.ஆர்.பாலு, சோனியாவை சந்திக்க உள்ளார்.


தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., குழுவினருடன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு பேச்சு நடத்தியது. கூட்டணி ஆட்சிக்கு உறுதியளிக்க வேண்டும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க ஒப்புக் கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அரசில் குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதுமில்லை. அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படவில்லை. எனவே, அதுபோன்ற முறையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.


இந்த கருத்து வேறுபாட்டால், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஏற்படாமல் நின்றுபோனது. மேலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சின்போது, ஆட்சியில் பங்கு என்பது தேவையற்ற ஒன்று என்றும், அதற்கு இப்போது எவ்வித அவசியமும் ஏற்படவில்லை என்றும், தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.ஆட்சியில் பங்கு அளிப்பது பற்றி, அவசியம் ஏற்பட்டால், தேர்தல் முடிந்து தான் பேச முடியும் அப்படி இருக்கையில், காங்கிரஸ் அக்கோரிக்கையை வலியுறுத்தியதால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையின் போது பேசவேண்டிய முக்கிய அம்சங்கள் தடைபட்டுப் போனதாகவும் தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டுகிறார்.


அவர் மேலும் கூறுகையில், "தி.மு.க., தலைமையில் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணிகள் பலமுறை அமைக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எழவில்லை. தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, ஆட்சி பங்கு பார்முலாவை முன்வைத்து சந்தித்த 1980 தேர்தலில், படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால், கூட்டணி ஆட்சி பார்முலா தமிழகத்துக்கு ஒத்துவராது' என்றார்.


இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலைப் போக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க, முடிவு செய்துள்ளது. சோனியாவின் தலையீட்டுக்குப் பின்னரே தி.மு.க., - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, முதல்வர் கருணாநிதியின் கருத்துக்களை சோனியாவிடம் கூறுவதற்காக, அவரை சந்திக்க டி.ஆர்.பாலு நேரம் கேட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் சோனியாவை சந்தித்து அவர் விளக்கம் அளிக்க உள்ளார். இதன்பின், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படலாமென தி.மு.க., கருதுகிறது.

Tuesday, February 22, 2011

பண பலத்தை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை


புதுடில்லி : தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது, பண பலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கடுமையாக கண்காணிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில், அவர்களுக்கு பணம், மது மற்றும் இதரப் பொருட்களை வழங்குவது லஞ்சம் என, கருத்தில் கொள்ளப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தில், அது குற்றமாகும். எனவே, இந்த வகையில், வாக்காளர்களைக் கவர முற்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும், பணம் கொடுத்து, வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக மீடியாக்களில் செய்தி வெளியிடச் செய்வதையும் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்களின் இதுபோன்ற செலவுகளை எல்லாம், தேர்தல் செலவுகளாக கணக்கில் கொள்வதோடு, தவறு செய்தவர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிப்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிப்பது உட்பட, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வேட்பாளர்கள் தங்களின் அன்றாட செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டியது அவசியம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட, 30 நாட்களுக்குள், தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும், தேர்தல் பிரசார காலங்களில், அவர்களின் செலவு கணக்குகளை அவ்வப்போது தேர்தல் செலவு பிரிவினர் பரிசீலிக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு பணம் அல்லது மது அல்லது இதரப் பொருட்கள் கொடுப்பதாக, எப்போது புகார் வந்தாலும், உடனே கமிஷனின் பறக்கும் படையினர் அங்கு செல்ல வேண்டும். அப்படையினர், தேவையான ஆதாரங்களை திரட்டுவதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுத்த பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதுபற்றி தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தகவல் அனுப்ப வேண்டும்.பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகள் தொடர்பாக, தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து, வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பலாம். செய்திகள் வெளியாக செலவிட்ட தொகையை ஏன் தேர்தல் செலவு கணக்கில் கொண்டுவரவில்லை என, விசாரிக்கலாம். பணம் கொடுத்து செய்திகள் வெளியிடப்பட்டால், அதுபற்றி தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர், 24 மணி நேரத்திற்குள் தேர்தல் கமிஷனக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.


திருமண மண்டபங்கள் அல்லது சமுதாயக் கூடங்கள் மற்றும் இதர பெரிய அரங்கங்கள், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை போன்ற பரிசுப் பொருட்களும், உணவு வகைகளும் வழங்கப் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் நேரத்தில், அடிக்கடி புகார்கள் வருகின்றன. ஐந்து மாநில தேர்தலின்போது இதுபோன்று நடந்தால், அவற்றை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் சம்பளம் கொடுக்கப்படலாம். அதாவது, சம்பளம் என்ற பெயரில் கூடுதல் பணம் கொடுக்கப்படலாம். அதையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.தேர்தல் நன்னடத்தை விதிகளால், ஏழை மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. இருந்தாலும், அரசு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பளத்திற்கு மேலாக, வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு கூடுதல் பணம் கொடுத்தால், அதை அனுமதிக்க முடியாது. இது ஊழலாகும்; தேர்தல் குற்றமாகும்.


மதுபானங்கள் கொடுத்து வாக்காளர்கள் கவரப்படலாம் என்பதால், மதுபான உற்பத்தி, அதன் விற்பனை மற்றும் ஸ்டாக் நிலவரங்களையும், தினமும் மதுபான கடைகள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரத்தில் உள்ள நிலவரங்களையும் தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.மாநிலங்களுக்கு இடையே சென்று வரும் வாகனங்களை சோதனைச் சாவடிகளில் உள்ளவர்களும், கலால் துறையினரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், பெரிய ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள் போன்ற இடங்களிலும், ஹவாலா ஏஜன்ட்கள், நிதி புரோக்கர்கள், கேஷ் கூரியர்கள், பான் புரோக்கர்கள், இதர சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமும் அதிகளவில் கணக்கில் வராத பணம் புழங்குவதாக தெரியவந்தால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும். வருமான வரிச் சட்ட விதிகளின் கீழ்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க பணம் மற்றும் இதரப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் நேரத்தில் புகார்கள் வரலாம். இந்தப் புகார்களை பதிவு செய்ய, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்றை வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகம் திறக்க வேண்டும்.தேர்தல் செலவு கண்காணிப்பு அமைப்புகள் மாவட்டங்கள் திறமையான வகையில் செயல்பட வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டி.இ.ஓ.,க்களுக்கு தேர்தல் செலவு கண்காணிப்பு குழுவின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் உதவி செய்வர்.இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, February 21, 2011

குப்பை தொட்டிகளை சி.பி.ஐ., ஆராய்ந்திருக்க வேண்டும்: ஜெ., யோசனை


சென்னை :"சி.பி.ஐ., சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின், பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கலைஞர் "டிவி'க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:தேடப்பட்டு வரும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வா குழுமம், முதல்வர் குடும்பத்தினர் 80 சதவீதம் பங்குகளை வைத்துள்ள கலைஞர் "டிவி' க்கு 206 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறது என்ற தகவலை கோர்ட்டில் வெளிப்படுத்தியதன் மூலம், மிகப் பெரிய தவறை சி.பி.ஐ., செய்து இருக்கிறது.இது போன்ற சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன், கலைஞர் "டிவி' அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். கலைஞர் "டிவி'யின் கலைக் கூடங்கள் மற்றும் அலுவலகத்தை உள்ளடக்கிய தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர் மட்டக்குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது.


இக்கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, கலைஞர் "டிவி'யின் தலைமை செயல் அலுவலர் சரத்குமார் ரெட்டி, கருணாநிதியின் உடன் பிறந்தவரது மகன் அமிர்தம், ஆடிட்டர் சிவசுப்ரமணியன், அரசு தலைமை வக்கீல் ராமன், மூத்த வக்கீல்கள், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோர் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.இரவு 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மறு நாள் காலை நான்கு மணியளவில் முடிந்ததாம். இந்தக் கூட்டத்தின் போது அண்ணா அறிவாலயக் கூட்டத்திற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டன.


கடந்த 13ம்தேதி, முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கடந்த 15ம் தேதியன்று, ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள், சிறுசிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்த பின் குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்தி விட்டு, 206 கோடி ரூபாய் பண பரிமாற்றத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என, கனகச்சிதமான ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார்.


இது மட்டுமல்லாமல் மேலும் ஒருபடி மேலே சென்று, சி.பி.ஐ., அல்லது வருமான வரித்துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கலைஞர் "டிவி' தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.இந்த அழைப்பை ஏற்று தான் சி.பி.ஐ.,யினர் கலைஞர் "டிவி' அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல் தெரிகிறது. சி.பி.ஐ., சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கலைஞர் "டிவி"க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Sunday, February 20, 2011

காங்கிரசுக்கு "கடுக்காய்' கொடுத்த தி.மு.க.,: பா.ம.க., தொகுதி உடன்பாட்டின் பின்னணி


அவசர அவசரமாக பா.ம.க.,விற்கு 31 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியதால், காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளது. தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையில் ஒரு குழு போடப்பட்டு, இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வராத நிலையில், தி.மு.க., எடுத்துள்ள இந்த திடீர் முடிவு எதற்காக என்ற சந்தேகம், காங்கிரசுக்கு எழுந்துள்ளது.


டில்லி வந்திருந்த போது முதல்வர் கருணாநிதி, தன் பேட்டியில், "பா.ம.க.,வும் கூட்டணியில் இருக்கிறது' என்று கூறி வைக்க, அன்றைய தினம் இரவே, பா.ம.க., மறுத்து அறிக்கை விட்டது. அடுத்தநாள் காலை, முதல்வர், "அவர்களும் முடிவு செய்யவில்லை; நாங்களும் முடிவு செய்யவில்லை' என்று கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின், சென்னைக்கு திரும்பிய முதல்வர், தி.மு.க., பொதுக்குழுவில் பேசும்போது, "சோனியாவை டில்லியில் சந்தித்தபோது, "பா.ம.க.,வை ஏன் கூட்டணியில் சேர்க்கிறீர்கள்; கடந்த தேர்தலில் நம் கூட்டணியை விட்டு வெளியேறிச் சென்றவர்கள்; கடைசிவரை ஆட்சி அதிகாரத்தை சுவைத்துவிட்டு, கடைசியில் துரோகம் செய்து விட்டு சென்ற கட்சி அது' என்று என்னிடம் வருத்தப்பட்டார்' எனக் கூறியதாக, செய்திகள் வெளியாயின.


இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து, காங்கிரசும், தி.மு.க.,வும் பேசுவதற்கு, இரு தரப்பிலும் ஐவர் குழுக்கள் அமைக்கப்பட்டன. காங்கிரசின் ஐவர் குழு, ஒரே ஒருமுறை முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததோடு சரி; டில்லிக்கு வந்து தமிழக மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து, ஆலோசனை நடத்தினர். காங்கிரசுக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து, ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் கூட துவங்கவில்லை. இந்த சூழ்நிலையில், பா.ம.க.,வுக்கு திடீரென 31 தொகுதிகளை ஒதுக்கியுள்ள விஷயம், காங்கிரசை பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


இதுகுறித்து நேற்று, டில்லியில் தகவலறிந்த உயர் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெறாத தி.மு.க.,வுக்கு, ஐந்து ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவை, காங்கிரஸ் அளித்து வந்தது. இதனால், இம்முறை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்டுப் பெற வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆட்சியிலும் பங்கு என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன் தேர்தல் குறித்த பேச்சு தீவிரம் அடையத் துவங்கிய சமயத்தில், காங்கிரசுக்குத் தான் இம்முறை முதல்மரியாதை என, தி.மு.க., தரப்பே வாக்குறுதி அளித்தது. காங்கிரஸ் திருப்திபடும் அளவுக்கு தொகுதிகளைத் தந்துவிட்டு, அடுத்ததாக பிற கட்சிகளுக்கு ஒதுக்க தி.மு.க., தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும், காங்கிரஸ் கேட்கும் 80, 90 தொகுதிகள் என்பது, தி.மு.க.,வுக்கு சற்று நெருக்கடியாகவே இருந்தது. இதனால், பா.ம.க.,வும் கூட்டணிக்குள் இருப்பதாக முன்கூட்டியே கூறிவிட்டால், காங்கிரசின் பேரத்தை குறைக்கலாம் என தி.மு.க., நினைத்தது.


முதல்வரின் டில்லி பேட்டிக்குப் பிறகு அதுமுடியாமல் போனது. பா.ம.க., பற்றிய விவகாரம் குறித்து இரு கட்சிகளுக்கு இடையில் வந்தபோது கூட, காங்கிரஸ் தரப்பிலிருந்து தி.மு.க.,விடம், "பா.ம.க., பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள்; அதில் தவறில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் எத்தனை என்பதை முடிவு செய்து விட்டு, பிற கட்சிகளுக்கு அளியுங்கள்' என்றே கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. காரணம் இரண்டு கட்சிகளும் கமிட்டி போட்டு பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இதற்கு ஒரு முடிவை சீக்கிரம் தெரிவித்தால் தான், சோனியா முன் வைக்கப்பட்டு இறுதி ஒப்புதலையும் பெற முடியும் என்று தான், தி.மு.க.,வுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அவசர அவசரமாக பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. இது காங்கிரசை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள சிதம்பரம்,வாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுமே கூட இதை எதிர்பார்க்கவில்லை. பா.ம.க.,வுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள தொகுதிகளை வைத்துத் தான் இனி தங்களிடம் தி.மு.க., பேசப்போகிறது என்பதால் அதிக பேரம் பேச முடியுமா என்ற சந்தேகம் காங்கிரசுக்கு வந்துள்ளது.


இது ஒருபுறமிருக்க, சில தினங்களுக்கு முன், குலாம்நபி ஆசாத்தை ஐவர் குழு சந்திக்க காத்திருந்த சமயத்தில், அன்புமணி டில்லிக்கு அழைக்கப்பட்டார். சோனியா, ராகுல் ஆகியோரது அப்பாயின்ட்மென்ட் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தங்களது கவனத்திற்கு அப்பால் காங்கிரசும், பா.ம.க.,வும் பேசுவதை தி.மு.க., ரசிக்கவில்லை. காரணம் தி.மு.க.,வை விட்டுவிட்டு வேறு கூட்டணி அமைக்க காங்கிரஸ் ரகசிய முயற்சிகள் எடுக்கப்படுவதாக, அரசல் புரசலாக செய்திகள் வெளிவருகின்றன. காங்கிரசின் அந்த முயற்சியில் பா.ம.க.,வும் முக்கிய கட்சி. எனவே காங்கிரஸ் பா.ம.க., உறவு தங்களை தாண்டிப் போகிறதோ என்ற சந்தேகத்தையும் தி.மு.க., தவிர்க்கவில்லை. இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி, பா.ம.க.,வுக்கு உடனே தொகுதிகளை இறுதி செய்வது தான். இந்த பின்னணியிலேயே 31 தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் காங்கிரசின் பேரத்தை தவிர்த்ததோடு, தங்களைத் தாண்டி காங்கிரஸ் எந்த ஒரு முயற்சியிலும் இறங்காமல் தி.மு.க., பார்த்துக் கொண்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Saturday, February 19, 2011

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 31 சீட் ஒதுக்கீடு: காங்., அதிர்ச்சி



சென்னை: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 சட்டசபை தொகுதிகளும், 2013ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று காலை 9 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பின் போது, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு முடிவானது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், ராமதாசும் கையெழுத்திட்டனர். வெளியில் வந்ததும், ராமதாஸ் நிருபர்களிடம் கூறும் போது, ""என் பேரன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க, முதல்வரை சந்திக்க வந்தேன். தேர்தல் உடன்பாட்டையும் முடித்துக் கொண்டு திரும்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் முதல்வரை சந்திக்கச் சென்ற நான், மகிழ்ச்சியுடன் திரும்பியுள்ளேன்,'' என்றார்.


பின், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸ் அளித்த பதில் விவரம்:


* அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் தேர்தல் உடன்பாடு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததா?


எதிர்பார்ப்பு இருந்தது; நிறைவேறியும் உள்ளது.


* காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கும் திட்டம் உள்ளதா?


கடந்த இரு நாட்களுக்கு முன், டில்லியில் சோனியாவை அன்புமணி சந்தித்துப் பேசியுள்ளார்.


* சட்டசபை தேர்தலில் உங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?


தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பங்கு வகிக்கும் பா.ம.க., - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

* கடந்த முறை தொகுதி பங்கீட்டின் போது, அள்ளியும் கொடுக்கவில்லை, கிள்ளியும் கொடுக்கவில்லை என்று கூறினீர்களே... இப்போதைய தொகுதி பங்கீடு எப்படி உள்ளது?


அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

* கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகளே, தற்போதும் ஒதுக்கப்பட்டு உள்ளதே... இதனால், பா.ம.க.,வின் வாதிட்டு பெறும் சக்தி குறைந்து விட்டதா?

வாதிட்டு பெறும் சக்தி குறையவும் இல்லை; அதிகரிக்கவும் இல்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார். பா.ம.க., நிறுவனர் ராமதாசுடன், கட்சித் தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.


காங்கிரஸ் அதிர்ச்சி! தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, சோனியாவை சந்திக்க டில்லி சென்ற முதல்வர் கருணாநிதி பேட்டியளிக்கும்போது, "பா.ம.க., எங்கள் கூட்டணியில் உள்ளது' என்று தெரிவித்தார். கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்டதற்கு, "செக்' வைக்கும் வகையில், பா.ம.க., குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டதாக கூறப்பட்டது. இதை பா.ம.க., தலைவர் ராமதாஸ் மறுக்கவே, பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருடனான சந்திப்பின்போது, "பா.ம.க.,வுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் காரணம் காட்டி, காங்கிரசுக்கான தொகுதிகளை குறைக்கக் கூடாது' என, சோனியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், "கூட்டணியில் பா.ம.க., சேர்வதை சோனியா விரும்பவில்லை' என, தி.மு.க., பொதுக்குழுவில் கருணாநிதி தெரிவித்தார். இந்நிலையில், பா.ம.க.,வை அழைத்து பேசி, அவர்களுக்கு 31 தொகுதிகளை ஒதுக்குவதாக நேற்று தி.மு.க., அறிவித்தது. இந்த அறிவிப்பால், காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. 80 முதல் 100 தொகுதிகளை கேட்டு, காங்கிரஸ் பேரம் நடத்தி வரும் நிலையில், பா.ம.க.,விற்கு வாரி வழங்கியுள்ளதால், காங்கிரசுக்கான தொகுதி ஒதுக்கீடு குறையும் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, காங்கிரசுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க, டில்லி பயணத்தின் போது தி.மு.க., போட்ட திட்டத்தை, அக்கட்சி இப்போது செயல்படுத்தி விட்டது என்ற குமுறல் காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது.


2013ல் பா.ம.க.,வுக்கு எப்படி ராஜ்யசபா சீட் கிடைக்கும்? தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 2013ம் ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள ராஜ்யசபா சீட் எப்படி கிடைக்கும் என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள கனிமொழி, திருச்சி சிவா (தி.மு.க.,), மைத்ரேயன், இளவரசன் (அ.தி.மு.க.,), ஞானதேசிகன் (காங்.,), டி.ராஜா (மார்க்சிஸ்ட்) ஆகியோரது பதவிக்காலம் 2013ல் முடிகிறது. இந்த ஆறு இடங்களிலிருந்து தான் பா.ம.க.,வுக்கு ஒரு இடம் கிடைக்கும். தி.மு.க., கூட்டணியில் 2013ம் ஆண்டு வரை பா.ம.க., நீடிக்கும்போது, அப்போதுள்ள கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ., எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும். ராஜ்யசபா எம்.பி.,யாக வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. தி.மு.க.,வுக்கு ஒன்றுக்கும் அதிகமான எம்.பி.,க்களை தேர்வு செய்யும் வலிமை இருந்தால் தான் பா.ம.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுக்கும். காரணம் பா.ம.க., 31 சட்டசபை தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. தமிழகத்தில் 2008ம் ஆண்டு ஆறு உறுப்பினர்களை தேர்வு செய்ய ராஜ்யசபா தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் மூன்று உறுப்பினர்களையும், காங்., சார்பில் இரண்டு உறுப்பினர்களையும், அ.தி.மு.க., சார்பில் ஒரு உறுப்பினரையும் தேர்வு செய்தனர். இதில், அன்புமணிக்காக ஒரு உறுப்பினரை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க.,வை பா.ம.க., வலியுறுத்தியது. ஆனால், கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று தி.மு.க., கூறியதால், கூட்டணியை விட்டு விலகிய பா.ம.க., லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தது.

Friday, February 18, 2011

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம்: ஜெ., அறிவிப்பு


சென்னை: "விரைவில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள, அ.தி.மு.க., அரசு, கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை தொடர்ந்து, கருணாநிதி வஞ்சித்து வருவதை பார்க்கும் போது, "சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற பழமொழி நினைவிற்கு வருவதோடு, கருணாநிதியிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலோங்கி நிற்பதும் தெளிவாகிறது. அனுபவம் வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிதாக ஆசிரியர்களை நியமிக்கபோவதாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது மிகுந்த வேதனையளிக்கும் செயல். கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர், 35 வயதை கடந்தவர்கள். இந்த வருமானத்தை நம்பி, திருமணம் செய்து குடும்பத்துடன் வசிக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இது போன்ற நடவடிக்கையை கருணாநிதி எடுத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்களை அழைத்து பேசி, பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கையை நிறைவேற்றிட ஆவண செய்ய வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை தி.மு.க., அரசு புறக்கணிக்கும் பட்சத்தில், விரைவில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள அ.தி.மு.க., அவர்களது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும், என்றார்.

Thursday, February 17, 2011

3ஜி மொபைலால் இயங்கும் ரோபோ துப்பாக்கி: நாகாவதி அணை பள்ளி மாணவர்கள் சாதனை

மேட்டூர் : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், 3 ஜி மொபைல் உதவியால் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை, தமிழக எல்லையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், பிடமனேரியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (43). இந்தியன் கல்வி அறக்கட்டளை நிறுவி நடத்தி வரும் ஜெயபாண்டியன், வீட்டு வேலை செய்யும் ரோபோ, தானியங்கி சிக்னல் உட்பட, 128 அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து, ஜெயபாண்டியன் தர்மபுரி மாவட்டம், நாகாவதி அணை அரசு துவக்க பள்ளி மாணவர்கள் உதவியோடு, 3ஜி மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் மால்கோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நேற்று, ரோபோ துப்பாக்கியை ஜெயபாண்டியன் இயக்கிக் காட்டினார்.


நிகழ்ச்சியில், மால்கோ பள்ளி முதல்வர் தேவராஜ், ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெயபாண்டியன் கூறியதாவது:"தர்மபுரியில், "மாணவர்கள் மியூசியம்' என்ற பெயரில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்க உள்ளோம். அதில், என் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் உருவாக்கிய அறிவியல் சாதனங்கள் வைக்கப்படும்.இந்த கண்காட்சிக்கூடம், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் புதிய கண்டுபிடிப்பான ரோபோ துப்பாக்கியை ஆட்கள் இல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். துப்பாக்கியின் ஒரு முனையில் 3ஜி மொபைல் வைத்து விட்டால் போதும், எந்த நாட்டில் இருந்தும் மற்றொரு, 3 ஜி மொபைல் மூலம் துப்பாக்கியில் உள்ள, 3ஜி மொபைலை தொடர்பு கொண்டு, துப்பாக்கியை இயக்கி இலக்கை நோக்கி குறி பார்த்து சுட முடியும்.


நாட்டின் எல்லைப் பகுதியில் வீரர்களே இல்லாமல், துப்பாக்கி, 3ஜி மொபைல் மட்டுமே வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்தவாரே கண்காணித்து இலக்கை சுட முடியும். இதில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ராணுவத்திலும் பயன்படுத்த முடியும். விரைவில், தர்மபுரியில் இந்திய அளவிலான போட்டி நடத்தவுள்ளோம்.பங்கேற்கும் போட்டியாளர்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தாலும், அங்கு இருந்தவாறே மொபைல் மூலம் தர்மபுரியில் உள்ள வீட்டு வேலை செய்யும் ரோபோ மற்றும் 3ஜி ரோபோ துப்பாக்கியை இயக்கி சுட வேண்டும். சிறப்பாக இயக்கிக் காட்டுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்' என்றார்.


நாகாவதி அணை அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் கூறியதாவது:ரோபோ துப்பாக்கியை வடிவமைக்க, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியது. செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ரோபோ துப்பாக்கி உதிரி பொருட்களை எங்கள் மாணவர்கள் சேகரித்து வழங்கினர். துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மீண்டும் பொருத்தும் அளவுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், என்றார்.

Wednesday, February 16, 2011

வெளிப்படையாக செயல்படுமாறு ராசாவுக்கு கடிதம் எழுதினேன்-பிரதமர்.


தமிழக மீனவர்கள் 106 பேரை சிறைபிடித்த இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் மத்திய அரசு சிக்கியுள்ள நிலையிலும் பிரதமர் மன்மோகன் எதற்கும் பதில் சொல்லாமல் நரசிம்ம ராவ் ஸ்டைலிலே ஆழ்ந்த மெளனம் காத்து வருகிறார். இதனால் எதிர்க்கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சி்த்து வருகின்றன.

இந் நிலையில் டெல்லியில் இன்று மன்மோகன் சிங் தனது இல்லத்தில் டிவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:

சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு, இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் போன்ற பிரச்சனைகளுக்கு மீடியாக்கள் அதிக முக்கியத்துவ
ம் கொடுத்து வந்தன. இது சம்பந்தமாக விளக்கம் தரவேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். நாட்டு மக்களுக்கு பதிலைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியாவை ஊழல் மலிந்த நாடாக கருதிவிட முடியாது. எல்லா மட்டங்களிலும் ஊழலைத் தடுக்க நடவ
டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ, காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் போன்ற அனைத்து பிரச்சனையும் அரசு மிகத் தீவிரமானதாகக் கருதுகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பணவீக்கம் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. இதைக் கட்டுப்படு்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மார்ச் மாதம் முடிவதற்குள் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வருவோம். உணவுப் பணவீக்கம் 15 சதவீதமாக இருந்தது. இப்போது 13.07 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயரும் போது விலைவாசி உயர்வும் ஏற்பட்டு விடுகிறது.



கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தை எதிர்க்கட்சியினர் நடத்த விடாமல் செய்தனர். அது ஏன் என்று என்னா
ல் புரிந்து கொள்ள முடியவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை அது முழுக்க தொலை தொடர்புத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்டது. அதில், 'முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு'என்ற விதிமுறைகள் கொண்டு வந்தது பற்றியோ அல்லது யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி என்னிடமோ அல்லது அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை. இதில் தொலைத் தொடர்புத்து
றை அமைச்சர் தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்று நான் ஆ.ராசாவுக்கு 2007 நவம்பர் மாதமே கடிதம் எழுதினேன்.அந்த கடிதத்துக்கு அன்றே அவர் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், நான் கண்டிப்பாக வெளிப்படையான தன்மையை கடைப்பிடிப்பேன். எதிர்காலத்திலும் இதை செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக ஏதும் நடக்காது என்று கருதியிருந்தேன்.

அதே போல ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் தான் விற்க வேண்டும் என்று தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ (TRAI)அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யவில்லை. இதனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூல
ம்தான் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்த முடியாமல் போய் விட்டது.தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யாததால் ஏலம் தேவையில்லை என்ற முடிவை ராசாவே எடுத்துவிட்டார். ஆனால் அந்த ஒதுக்கீட்டின் பின்னணியோ, அதன் பிறகு நடந்த விஷயங்களோ எனக்குத் தெரியாது.

2வது முறையாக காங்கிரஸ் கூட்டணி பதவியேற்ற போது ராசா மீண்டும் அதே துறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை. கூட்டணி கட்சியான திமு
அவரைத் தேர்வு செய்தது. அதில் நாங்கள் தஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: வெளிப்படையாக செயல்படுமாறு ராசாவுக்கு கடிதம் எழுதினேன்-பிரதமர்

டெல்லி: தமிழக மீனவர்கள் 106 பேரை சிறைபிடித்த இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் மத்திய அரசு சிக்கியுள்ள நிலையிலும் பிரதமர் மன்
மோகன் எதற்கும் பதில் சொல்லாமல் நரசிம்ம ராவ் ஸ்டைலிலே ஆழ்ந்த மெளனம் காத்து வருகிறார். இதனால் எதிர்க்கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சி்த்து வருகின்றன.

இந் நிலையில் டெல்லியில் இன்று மன்மோகன் சிங் தனது இல்லத்தில் டிவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:

சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு, இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் போன்ற பிரச்சனைகளுக்கு மீடியாக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. இது சம்பந்தமாக விளக்கம் தரவேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்புக்கு ஏற்
பாடு செய்துள்ளேன். நாட்டு மக்களுக்கு பதிலைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியாவை ஊழல் மலிந்த நாடாக கருதிவிட முடியாது. எல்லா மட்டங்களிலும் ஊழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ, காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் போன்ற அனைத்து பிரச்சனையும் அரசு மிகத்
தீவிரமானதாகக் கருதுகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பணவீக்கம் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. இதைக் கட்டுப்படு்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மார்ச் மாதம் முடிவதற்குள் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வருவோம். உணவுப் பணவீக்கம் 15 சதவீதமாக இருந்தது. இப்போது 13.07 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயரும் போது விலைவாசி உயர்வும் ஏற்பட்டு விடுகிறது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தை எதிர்க்கட்சியினர் நடத்த விடாமல் செய்தனர். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை அது முழுக்க தொலை தொடர்புத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்டது. அதில், 'முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு'என்ற விதிமுறைகள் கொண்டு வந்தது பற்றியோ அல்லது யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி என்னிடமோ அல்லது அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை. இதில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்று நான் ஆ.ராசாவுக்கு 2007 நவம்பர் மாதமே கடிதம் எழுதினேன்.அந்த கடிதத்துக்கு அன்றே அவர் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், நான் கண்டிப்பாக வெளிப்படையான தன்மையை கடைப்பிடிப்பேன். எதிர்காலத்திலும் இதை செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக ஏதும் நடக்காது என்று கருதியிருந்தேன்.

அதே போல ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் தான் விற்க வேண்டும் என்று தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ (TRAI)அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யவில்லை. இதனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம்தான் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்த முடியாமல் போய் விட்டது.தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யாததால் ஏலம் தேவையில்லை என்ற முடிவை ராசாவே எடுத்துவிட்டார். ஆனால் அந்த ஒதுக்கீட்டின் பின்னணியோ, அதன் பிறகு நடந்த விஷயங்களோ எனக்குத் தெரியாது.

2வது முறையாக காங்கிரஸ் கூட்டணி பதவியேற்ற போது ராசா மீண்டும் அதே துறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை. கூட்டணி கட்சியான திமுக அவரைத் தேர்வு செய்தது. அதில் நாங்கள் தலையிடவில்லை. அந்த நேரத்தில் ராசா பற்றி தவறான விஷயங்கள் எதுவும் என் மனதில் இல்லை.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டது என்பதை கணித்து சொல்வது கடினம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு நான் பயப்படவில்லை. எந்தக் குழு முன்பும் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.நான் பலவீனமான பிரதமர் என்று சொல்வது சரியல்ல. எனது நடவடிக்கை சரியான திசையிலே செல்கின்றன.

எந்தச் சூழ்நிலையிலும் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன். எனது பணியை ஒருபோதும் இடையில் விட்டு விட்டு ஓடி விட மாட்டேன். எங்கள் அரசு வலுவான கூட்டணியுடன் செயல்படுகிறது. எல்லா கட்சிகளும் முழு மனதோடு ஆதரவு தருகின்றன. எனவே கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். கூட்டணி ஆட்சி என்பதால் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை நான் மறுக்கவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 106 தமிழக மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல கேரள சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரசே வெல்லும் என்றார்.

பிரதமர் பேட்டியில் திருப்தியில்லை-பாஜக:

இந் நிலையில் பிரதமர் பேட்டி தொடர்பாக பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் தனது பேட்டியில் முழுமையான தகவல்களை சொல்லவில்லை. மக்கள் எதிர்பார்த்த விளக்கங்களும் அவரிடம் இருந்து வரவில்லை. காங்கிரஸ் அரசில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கும் வகையில் அவரது பேட்டி உள்ளது என்றார்.

Tuesday, February 15, 2011

சட்டசபை தேர்தலில் கருணாநிதியை தோற்கடிப்போம்: ஜெயலலிதா ஆவேசம்

சென்னை : ""சட்டசபை தேர்தலில் இது வரை தோற்றதில்லை என்றும் கூறும் கருணாநிதியை முதல்முறையாக தோற்கடிப்போம்,'' என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

ஜெயலலிதாவின் 63-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜெ.,பேரவை சார்பில், சென்னையில் நடந்த விழாவில், 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்து ஜெயலலிதா பேசியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைமாறிய பல லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தை சேர்ந்த, ஒரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டு, குற்றச் செயல்களுக்கும், சீர்கேடுகளுக்கும் காரணமாக உள்ளது.இப்பணத்தை பல கோடி ரூபாயை கல்வி, சுகாதாரம், தொழில், விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருந்தால், நாடு செழிப்படைந்து இருக்கும். இவர்களிடமிருந்து தமிழகத்தையும், தேசத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அ.தி.மு.க.வுக்கு உண்டு.ஊழல் சக்திகளின் கையில் பணம், அதிகாரம், அடியாள் பலம் உள்ளது. நம்மிடம் நேர்மை, தேச பற்று, பொது நலன் உள்ளது. இவற்றைக் கொண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். இது அரசியல் அறைகூவல் அல்ல ஒட்டு மொத்த தமிழர்களின் அறைகூவல். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடாது.



தேர்தலில் கருணாநிதி தோற்றதே இல்லை என்று சொல்லுகிறார். நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் அவரை தோற்கடித்து, புதிய வரலாறு படைப்போம். அதன் பின், அ.தி.மு.க.வுக்கு வீழ்ச்சியே கிடையாது.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


விழாவில், 65 மணமகன்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து, திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்து, பூஜை மற்றும் சமையல் பாத்திரங்கள், படுக்கையறை பொருள்கள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.


குரு- சீடன் கதை : ஜெயலலிதா கூறிய குட்டி கதை:குருவும், சீடனும் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தனர். வழியில், துளிர்விடும் செடியை பிடுங்கும்படி சீடனிடம் குரு கூறினார். சீடனும் பிடுங்கி எறிந்தான். சிறிது தூரம் சென்றதும் சிறிது வளர்ந்த செடியை பிடுங்கும்படி, குரு கூறினார். சீடனும் பிடுங்கினான். கடைசியாக பெரிய மரத்தை பிடுங்கும்படி குரு கூறினார். சீடன் திகைத்து நின்றான்.இதைப் பார்த்த குரு, முளைவிட்ட செடியை எளிதாக பிடுங்கி விட்டாய். அதை போல, பிரச்னையை ஆரம்பித்திலேயே தீர்க்க வேண்டும்.கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்டது. இதை, முளையிலேயே கிள்ளி எறிய சட்டசபை தேர்தல் நல்ல தருணம் என்றார்.

Monday, February 14, 2011

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அரசு பாரபட்சமோ தயக்கமோ காட்டக்கூடாது-உச்சநீதிமன்றம்.



2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் அரசு பாரபட்சமோ தயக்கமோ காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு காட்டியதையடுத்து, சிபிஐயின் விசாரணை வளையம் பெரிதாகிக் கொண்டே வருகிறது.

இதன் ஒரு கட்டமாக நேற்று பாஜக அரசில் தொலைத்தொடர்பு அமைச்சரா
க இருந்த அருண் ஷோரியை பிப்ரவர் 21-ம் தேதி விசாரணைக்கு வருமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. முதலில் வருபவர்களுக்கே உரிமம் தருவதில் முன்னுரிமை என்பு 'புரட்சிகர' தொலைத் தொடர்புக் கொள்கையை வகுத்து பெரும் கொள்ளைக்கு வழிவகுத்தவர் இவரே என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு (உலகிலேயே Disinvestment என்ற பெயரில் ஒரு துறையை முதல்முறையாக உருவாக்கியது பாஜக அரசு. அதற்கு மந்திரியாகவும் இருந்தவர் இந்த அருண்ஷோரிதான்!)

இப்போது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி ஆதாயம் பெற்றவர்கள், அப்படிப் பெறுவதற்காக பெரும் தொகையை லஞ்சமாகத் தந்தவர்கள் மீதும் சிபிஐயின் பிடி இறுகத் தொடங்கியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டில் 8 தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன. அந்த 8 நிறுவனங்களில் ரிலையன்ஸ், லூப், எஸ்டெல், ஸ்வான், யுனிடெக் ஆகிய 5 நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை எப்படி பெற்றன என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் முதல் கட்டமாக ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களின் முறைகேடுகள் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனமான யுனிடெக், வங்கிகளில் கடன் வாங்கி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இன்னணொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற டாடா தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டு வருகிறது. இதற்காக டாடா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்புகிறது சி.பி.ஐ.

அரசியல் - வர்த்தகத் தரகர் நீரா ராடியா மூலம் டாடா நிறுவனம் பெரிய அளவில் ஸ்பெக்ட்ரமில் பலன் அடைந்தள்ளது. ஜி.எஸ்.எம். உரிமத்தை ரூ. 1658 கோடிக்கு பெற்ற டாடா நிறுவனம், சிறிது நாள் கழித்து அதன் 26 சதவீத பங்கை ஜப்பானின் டொகோமா நிறுவனத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.

இது தவிர டாடா நிறுவனம் சென்னை உள்பட பல நகரங்களில் வாங்கி உள்ள சொத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்ய சி.பி.ஐ. தீர்மானித்துள்ளது.
Related News

Sunday, February 13, 2011

ரோஜா மலருக்கு வயசு ஆயிரம்


மலர்களிலேயே பெருமை மிக்க மலர் எது என்பதைக் குறித்து விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்குமிடையே சர்ச்சை ஏற்பட்டதாம். பிரம்மா தாமரைதான் சிறந்த மலரென்றும், விஷ்ணு ரோஜாதான் சிறந்த மலரென்றும் வாதிட்டுக் கொண்டிருந்தபோது, இமய மலைச்சாரலில் தென்பட்ட அழகிய ரோஜா மலர்களைக் கண்ட பிரம்மா, ரோஜாதான் சிறந்த மலர் என்பதை ஒப்புக் கொண்டாராம். இது ரோஜாவைக் குறித்து கூறப்படும் பெருமையான செவிவழிக்கதை.அந்த அளவுக்கு மலர்களின் ராணியாக ரோஜா புகழ் பெற்றதாக இன்றளவும் திகழ்கிறது. ரோஜா மலர்களின் அழகில் மயங்காதவர் எவரும் இல்லை.


ரோஜாக்களில் இந்திய ரோஜாக்களுக்குச் சர்வதேச அளவில் தனி மதிப்பே உள்ளது. கங்கை நதி தீரத்தில் காணப்படும் ரோஜா ரகம்தான், இந்திய ரோஜாவின் பூர்வீக ரகமாகும். இந்தியாவில் நெடுங்காலத்திற்கு முன்னரே ரோஜாக்கள் இருந்துள்ளன என்பது பாறைப் படிவங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.ரோஜா ரகங்கள் இங்கிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்துமே இனவிருத்தி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்திய ரோஜாக்களையும் இனவிருத்தி செய்து சர்வதேச அளவில் பிரபலப்படுத்த முடியுமென்ற நோக்கோடு செயல்பட்டுவருகின்றனர், தமிழகத்தில் கொடைக்கானலில் வசித்து வரும் இருவர்.அவர்கள், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேத்தி கிரிஜாவும், அவரது கணவர் வீரராகவனும்தான். வீரராகவன், கடந்த 1952}ம் ஆண்டில் சென்னையில் வேளாண்மைத் துறை இயக்குநராக பதவி வகித்த என்.எஸ்.சிவராமனின் மகன் ஆவார். வீரராகவன் ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்.கிரிஜாவும் வீரராகவனும்தான், இனவிருத்தி செய்யப்படும் இந்திய ரோஜாக்களின் வழிகாட்டிகள் என ரோஜா உலகில் பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர். உதகையில் அமைந்துள்ள அரசினர் ரோஜா பூங்கா கடந்த 1995}ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. தற்போது இப்பூங்காவில் சுமார் 3 ஆயிரம் ரகங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. இவற்றில் இந்திய பாரம்பரிய ரோஜாக்கள் இல்லை என்றிருந்த ஒரு குறையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதற்காக பாரம்பரிய ரோஜா ரகங்களையும் உதகையில் நடவு செய்வதற்காக வந்திருந்த இத்தம்பதியினர் நம்மிடம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். கிரிஜா வீரராகவன் கூறும்போது, ""மனிதன் தோன்றியதிலிருந்தே ரோஜாவுடன் கொஞ்சி குலாவியிருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆண்டுக்கு ஒரு முறையே மலரும் திடமான ஐரோப்பிய வகைகளையும், எப்போதும் மலரும் மென்மையான ஆசிய வகைகளையும் சேர்த்து புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ரோஜாக்கள்தான் இன்று ஹைபிரிட் டீ, புளோரிபண்டா, கிராண்டிபோளோரா, கிளைம்பர், மினியேச்சர் மற்றும் பாலியான்தஸ் எனப் பல்வேறு ரகங்களிலான பெயர்களில் அழைக்கப்படுகின்றன.ரோஜா மலர்கள் அழகுக்கு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் வாய்ந்தவையாகும். ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகளின் தயாரிப்பில் ரோஜாவும் இடம் பெறுகின்றது. காமசூத்திரத்தில் கூட ரோஜாக்களைக் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. சோமநாதபுரம் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் அக்கோவிலுக்கு தினந்தோறும் 100 ரோஜா மலர்களையும், 1,000 அரளி மலர்களையும் வழங்க வேண்டுமென்ற உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ள தகவல் உள்ளது'' எனத் தெரிவித்தார்.வீரராகவன் தொடர்ந்தார், ""இந்திய ரோஜா ரகங்கள் பாரம்பரியப் பெருமை உள்ளவை. கடந்த 1952ம் ஆண்டில் குன்னூருக்கு வந்திருந்தபோது அங்கிருந்த பழமையான ரோஜா செடிகளில் பூத்திருந்த ரோஜா மலர்கள் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அதன்பின்னர் இந்தியப் பாரம்பரிய ரோஜா ரகங்களை இனவிருத்தி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டேன். நெல்லூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் ஓய்வு நேரத்தில் புதிய ரக ரோஜாக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டேன்.இதுவரை 85}க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்களை உருவாக்கியுள்ளேன். இவற்றில் "கிளினோபில்லா' மற்றும் "பிராக்டியேட்டா' ஆகிய இரண்டு ரகங்கள் சர்வதேசப் புகழ் வாய்ந்தவையாகும்.இந்தியாவிலிருந்த புத்த மதத் துறவிகள் ரோஜா செடிகளைச் சீனாவுக்குக் கொண்டு சென்று வளர்த்ததாகக் குறிப்புகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பாராம்பரியம் உள்ள ரோஜாச் செடிகள் சீனாவில் உள்ளன. அவை கொடைக்கானலிலும் உள்ளன. அதை பட்டுத் துணிகளில் ஒவியமாகவும் தீட்டி வைத்துள்ளனர். மாவீரன் அலெக்சாண்டர் தனது தேசிய மலராக ரோஜாவையே அறிவித்திருந்தார்.ரோஜா மலர்கள் உலகின் எப்பகுதியிலும் வளரக் கூடியவையாகும். மெரீனா கடற்கரையிலிருந்து, சைபீரிய பனி வரையிலும் வளரும். சூழலுக்கேற்ற ரகங்களைக் கண்டறிந்து நடவு செய்தால் ரோஜா மலர்களை எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம். இந்திய ரோஜா ரகங்கள் தானாக உருவாகுபவை. தற்போது ஹைபிரீட் ரோஜாக்களும் கலப்பின முறையிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன'' என்றார்.இத்தம்பதியினரைக் குறித்து அவர்களது நெருங்கிய நண்பரான கஸ்தூரிரங்கன் கூறுகையில், ""உலகெங்கிலுமுள்ள ரோஜா பூங்காக்களில் புதிய ரகங்களை நடவு செய்வதிலிருந்து, கருத்தரங்குகள் நடத்துவது வரை கிரிஜா-வீரராகவன் தம்பதியினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே செயல்படுத்தப்படுகின்றன. இவர்களது முயற்சியால் ஆசியாவிலேயே மிகப்பெரிய ரோஜா பூங்காவான உதகையிலுள்ள அரசினர் ரோஜா பூங்காவில் விரைவில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோஜா மலர்களும் பூத்து குலுங்குவது உறுதி!'' என்றார்.

நிரா ராடியா நண்பர்களை விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை


சென்னை : ""நிரா ராடியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கை: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சி அமைத்த போது நடந்ததாக கூறப்படும் 600 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை, தொலைத்தொடர்பு துறை ராஜாவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் கனிமொழி அதிக ஆர்வம் காட்டியது, கனிமொழியின் தாயார் ராஜாத்திக்கு சென்னையில் முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என, டாடாவிடம், ராஜாத்தி கோரிக்கை வைத்தது ஆகிய அனைத்தும், மிகவும் ஆழமாக கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டியவை. அமைச்சர்களை நியமனம் செய்யும் பிரதமரின் தனிப்பட்ட உரிமையை வெளி நபர்கள் பறித்து கொண்டது குறித்த உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால், கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தி உட்பட நிரா ராடியாவுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Saturday, February 12, 2011

கருணாநிதியையும்,அவரது குடும்பதினரையும் "ஸ்பெக்ட்ரம்" வழக்கில் சேர்க்க வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

சென்னை : "கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள்' என, ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை: முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் பாராட்டு பெற தகுதியுடையவர். "விஞ்ஞான பூர்வமான ஊழல்' என வருகிற போது, கடந்த 69ல், முதன் முறையாக முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து, இன்று வரை அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார். சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52, 53ல் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, அவரது தாய் சிவபாக்கியம், பாதுகாவலர் கபாலி ஆகியோர், "கதவு எண் 9, முதல் குறுக்கு தெரு, ராஜாஅண்ணாமலைபுரம், சென்னை' என்ற முகவரியை கொண்ட வீட்டை, விஸ்வாசம் என்பவரிடம் இருந்து வாங்கியது முதல், அதை எப்படி எல்லாம் மாற்றி, மாற்றி கணக்கு காட்டியிருக்கின்றனர் என்பது குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ராஜாத்திக்கு கடன் கொடுப்பதற்காக, ராஜாத்தியின் தாயாரிடம் இருந்து பணம் வாங்கியதாக, ராஜாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருப்பதும் உள்ளது. இது தொடர்பாக, நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத்தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலை நீதிபதிக்கு ஏற்பட்டது. எனவே, "விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்' என, கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.


"ஸ்பெக்ட்ரம்' இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞான பூர்வமான ஊழல்கள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத்துறையைச் சேர்ந்த, "டைனமிக்ஸ் பல்வா' என்ற நிறுவனத்தால், புதிதாக தொடங்கப்பட்ட, "ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்திற்கு, "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டை, அடிமாட்டு விலையான, 1,537 கோடி ரூபாய்க்கு ராஜா அளித்தார். இதற்கு பின், "டைனமிக்ஸ் பல்வா' நிறுவனம், தன் 45 சதவீத பங்குகளை, அரபு எமிரேட் நாட்டைச் சேர்ந்த, "எடிசலாட்' நிறுவனத்திற்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. கருணாநிதிக்கு மறைமுகமாக லஞ்சம் கொடுத்தார்: இதற்காக, "டைனமிக்ஸ் பல்வா' அதிபர் பல்வா, வருமான வரித்துறையின் பார்வையில் இருந்து தப்புவதற்காக, தன் கட்டுப்பாட்டில் வரும், 11 நிறுவனங்களில் இருந்து, 25 லட்சம் முதல், 100 கோடி ரூபாய் வரை மொத்தம் 209.25 கோடி ரூபாயை, ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான, "குசேகான் ப்ரூட்ஸ்' மற்றும் "வெஜிடபிள்ஸ்' என்ற நிறுவனத்திற்கு மாற்றியிருக்கிறார்.


"குசேகான்' நிறுவனம், இதில் இருந்து, 206.25 கோடி ரூபாயை, பல்வா மற்றும் மொரானிக்கு சொந்தமான, "சினியுக் பிலிம்ஸ்' நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறது. இந்நிறுவனம், 2009 -10ம் ஆண்டு, கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோர், 80 சத பங்குகளை பெற்றுள்ள, "கலைஞர் டிவி'க்கு உத்தரவாதமற்ற கடனாக, 206 கோடி ரூபாயை கொடுத்து இருப்பது தெரிய வருகிறது. சர்க்காரியா கமிஷன் குறிப்பிட்டுள்ள பணப் பரிமாற்றமும், "கலைஞர் டிவி' பண பரிவர்த்தனையும் ஒத்திருக்கிறது. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவிற்கு நேர்மையற்ற முறை. எனவே, கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், "ஸ்பெக்ட்ரம்' இமாலய ஊழலில், குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள். இதை செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும்; நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Friday, February 11, 2011

கருணாநிதி பாராட்டப்பட வேண்டியவர்-ஜெயலலிதா


சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் மிகவும் ஒத்திருக்கிறது. அதே குழப்பமான கணக்கு முறை, பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை கையாளப்பட்டுள்ளது. அதே மூளை தானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!. இதன்மூலம் விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வரும்போது 1969-ம் ஆண்டு முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு மாதிரியான கொள்கையை முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
யில், திமுக அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வருகிற போது, 1969ம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி. ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மனைவி திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விஸ்வாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ 57,000 விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் தர்மா. இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் தர்மா. இந்த வீட்டை வாங்கிய டி.கே. கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார். அதே நாளன்று, டி.கே. கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்யம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். தர்மாவின் தாயார் தான் இந்த சிவபாக்யம்!!. இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.

20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்யம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் ரூ 63,000 என்றும் தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ. 57,000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது. கடனாக பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது.

இந்த ஆவணத்தின்படி, கடன் வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்து இட்டு இருக்கிறார். பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு விட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்!!.

நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத் தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞான பூர்வமான ஊழல்கள் தான் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்திற்கு, அரிதான 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையான ரூ. 1,537 கோடிக்கு முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா அளித்தார். இதற்குப் பிறகு, டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை யுஏஇ நாட்டைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ 4,200 கோடிக்கு விற்றது.

இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் எஜமானரும், குருவுமான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் லஞ்சம் கொடுத்தார். ஆனால், இந்தப் பணம் நேரடியாக கொடுக்கப்படவில்லை. வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ 25 லட்சம் முதல் ரூ 100 கோடி வரை, ஆக மொத்தம் ரூ 209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான குசேகான் ஃப்ரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ் என்ற நிறுவனத்திற்கு பால்வா மாற்றியிருக்கிறார்.

குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ. 206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறது. இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010ம் ஆண்டைய இருப்பு நிலைக் குறிப்பை பார்க்கும் போது, கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியும் சேர்ந்த 80 விழுக்காடு பங்குகளை பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த கலைஞர் டி.வி.க்கு உத்திரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் ஒத்திருப்பது தான் இதில் விசேஷமான ஒன்று. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை. அதே மூளை தானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!.

கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்பொழுது தான் நீதி நிலைநாட்டப்படும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விஜய்யின் அரசியல் பயணம் நாகப்பட்டினத்தில் இருந்து ஆரம்பம். பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்கிறார்.


நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதிக்கிறார். தேர்தலுக்கு முன் திருச்சியில் ரசிகர்கள் மாநாடு நடத்தி இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். அதன் பிறகு பிரசாரத்திலும் குதிக்கிறார்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், அரசியல் பணிகளில் ஈடுபடத் துவங்
கியுள்ளனர்.அவர்கள் விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன் நாகப்பட்டினம் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து மீனவர்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.



சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கப்பட்டன.

இது போல் விஜய்யும் அங்கு சென்று மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விஜய்யுடன் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்வார் என தெரிகிறது.

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினம் கடலோர பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற 22-ந்தேதி விஜய் அப்பகுதிகளுக்கு செல்வார் என கூறப்படுகிறது. அப்போது விஜய் ரசிகர்கள் 1 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம் வருவார்கள் என்று திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ராஜா கூறினார்.

Thursday, February 10, 2011

ஓட்டுக்கு பணம் வாங்கினால் உரிமை பறிபோகும்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை : ""ஓட்டுக்கு பணம் வாங்குவோர், தங்கள் ஜனநாயக உரிமையை இழக்க நேரிடும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேசினார்.

வரும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் பணிபுரியும் பகுதி நேர செய்தியாளர்களுக்கு, இரண்டு நாள் பயிலரங்கம் சென்னையில் நேற்று துவங்கியது. பயிரலங்கை துவக்கி வைத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேசியதாவது: சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஓட்டளிக்க உரிமையுள்ள அனைவரது பெயரையும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் சுதந்திரமாக ஓட்டுப் போடவும் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை, ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் 54 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் பணியில் மூன்று லட்சம் அரசு பணியாளர்களும், பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசாரும் ஈடுபட உள்ளனர்.


சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலை பின்பற்றி, தமிழக சட்டசபை தேர்தலிலும் பணபலம், ஆள்பலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. வாக்காளர்களின் ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் வகையில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் துண்டு சீட்டு தரவும், அதை ரகசியமாக ஒரு பெட்டியில் போடும்படி செய்யவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதோர், தங்கள் விருப்பத்தை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் தெரிவிக்கும் வசதியை, வரும் தமிழக சட்டசபை தேர்தலில் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை. தேர்தலில், ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாசாரம் மாற வேண்டும். ஓட்டுப் போட பணம் வாங்குவோர், எதிர் காலத்தில் தங்கள் பகுதியின் குறைகளை களையும்படி, மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்கும் ஜனநாயக உரிமையை இழக்க நேரிடும். இவ்வாறு பிரவீன்குமார் பேசினார்.


முன்னாள் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை கமிஷனர் விட்டல் பேசும்போது, "இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. இந்த ஊழலை ஒழிக்க, நீதித் துறை, தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய கணக்கு தணிக்கை குழுவுக்கு உதவும் வகையில் ஊடகங்கள் செயல்பட வேண்டும்' என்றார். விழாவில், அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குனர் (செய்தி பிரிவு) மொகந்தி, மாநில செய்தி பிரிவு தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Wednesday, February 9, 2011

27 ஆண்டுகளாக வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை: 21 ம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு கிராமம்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 27 ஆண்டாக வீடுகளில் மின்இணைப்பு இல்லாத பரிதாப கிராமம் உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சியில் உள்ளது முந்தல்முனை. 110 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தானத்திற்கு பாத்தியமானது. 1983ல் உருவான இக்கிராமம் 500க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. இன்று வரை இப்பகுதியில் மின்சாரம் இல்லை. 1993ல் இருந்து மின்வசதி கேட்டு முறையிட தொடங்கிய இவர்களுக்கு , 1996ல் மீன்வளத்துறை சார்பில் சிறப்பு திட்டம் ஒன்றில் 11 மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கவில்லை. "வீட்டு ரசீது இருந்தால் மட்டுமே இணைப்பு தரமுடியும்,' என, மின்வாரியத்தினரும், "ஆரம்ப காலத்திலிருந்து தங்கியதற்கான பணத்தை கட்டினால் மட்டுமே ரசீது தரப்படும்,' என, தேவஸ்தான அதிகாரிகளும் கைவிரித்து விட்டனர். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்த முடியாத நிலையில், மின்சார கோரிக்கைக்கு அக்கிராமத்தினர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.


கடந்த லோக்சபா தேர்தலில், ""இப்பகுதியின் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தருவதாக,'' தி.மு.க.,வின் ரித்தீஷ்குமார் எம்.பி., வாக்குறுதி கொடுத்தார். வெற்றி பெற்ற அவரும் இன்று வரை கண்டுகொள்ளவில்லை. அரசு தரப்பில் அனைவருக்கும் இலவச "டிவி' வழங்கப்பட்டுள்ளது. அவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலையில், இடத்தை அடைக்கும் என்பதால், தெரு ஓரத்தில் "டிவி'க்களை அடுக்கி வைத்துள்ளனர். வீடு தவறாமல் சிம்னி விளக்கும், மாலை நேரத்தில் தெருவிளக்கு படிப்பும் தான் இக்கிராம மக்களின் வழக்கமான நடவடிக்கை.


ஊர் தலைவர் பொன்னுச்சாமி கூறியதாவது: மின்சாரத்தை பயன்படுத்தாமல் 27 ஆண்டுகள் கடந்து விட்டன. தேவஸ்தான அதிகாரிகளும், மின்வாரியத்தினரும் தொடர்ந்து வீம்பு பிடிப்பதால் எங்களுக்கு இனி மின்இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை, என்றார். ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான இணை ஆணையர் இளங்கோ கூறுகையில், ""முந்தல்முனை பகுதியினரின் கோரிக்கை குறித்து ஆணையாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார். ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் யதீந்திரன் கூறுகையில், ""நிலப்பிரச்னையில் இணைப்பு வழங்காமல் இருந்திருக்கலாம். சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி , தீர்வு காண முயற்சிப்போம்,'' என்றார்.



பிடித்தால் கீழே ஓட்டு போடவும்

Tuesday, February 8, 2011

சட்ட விரோதமாக பணம் பெற்றவர்கள் கம்பி எண்ண வேண்டி வரும்: ஜெ.

சென்னை : "சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுடைய கடமையை பாரபட்சமின்றி, அச்சமின்றி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய தொகையை சட்ட விரோதமாக பெற்ற அனைவரும், சிறைக்கு பின்னால் கம்பி எண்ண வேண்டி வரும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என, சுப்ரமணியசாமி கோர்ட்டில் விடுத்த அறிக்கையை, நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். இந்தக் கோரிக்கைக்கான காரணங்களும், ஆதாரங்களும் பின் வருமாறு:கனிமொழி இன்று பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி. தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கும் கலாசார விழாக்களை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தும் பொறுப்பை, கனிமொழி மற்றும் ஜெகத் கஸ்பரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தமிழ் மையத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. இந்த நிறுவனம், சென்னை சங்கமம் என்ற பெயரில் கலாசார விழாக்களை நடத்தி வருகிறது.


ராஜாத்திக்கு சொந்தமான ராயல் எண்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராக பணிபுரிந்து வந்த சரவணன், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச்சைக்குரிய 350 கோடி ரூபாய் மதிப்புடைய வோல்டாஸ் நிலம், மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு வெறும் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட போது தரகராகச் செயல்பட்டவர் தான் இந்த சரவணன்.இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என வெளிப்படையாகத் தெரிவித்த ராஜாத்தி, இந்த நிலம் குறித்த தனது கவலையை நிரா ராடியாவுடன் டெலிபோன் உரையாடலில் தெரிவித்திருக்கிறார். சொற்ப விலைக்கு வோல்டாஸ் நிலத்தை வாங்கிய மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தான், கோத்தகிரியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டத்தை, வெறும் இரண்டரை கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்.


சி.ஐ.டி., காலனியில் அமைந்துள்ள ராஜாத்திக்கு சொந்தமான புதிய வீட்டின் "ஏசி' பெட்டிகளை பழுது பார்த்துக் கொண்டிருந்த "ஏசி' மெக்கானிக் டேனியல் சாமுவேல், தமிழகத்தின் இரண்டாவது பெண்ணுக்காக மூணாறு, கோட்டயம் மற்றும் கேரளாவில் உள்ள இதர இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறார்.பாலங்கள், புதிய நூலகக் கட்டடம், தலைமைச் செயலகக் கட்டடம் ஆகியவற்றை கட்டுவதற்கான பொறுப்பு, இந்த இ.டி.ஏ., குழுமத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டது.


முதலில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகமாகக் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பென்னாகரம் இடைத்தேர்தலின் போது 750 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம் என, தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பற்றி கருணாநிதி குறிப்பிட்டார். கவர்னர் உரையில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான செலவு 910 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான செலவு 1,100 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.ஸ்பெக்ட்ரம் இழப்பைப் போலவே, இந்தக் கட்டடத்தை கட்டி முடிப்பதற்குள், இதற்கான செலவு மேலும் உயரும். மேற்படி திட்டங்களின் மூலம் பயனடைந்த இதே இ.டி.ஏ., குழுமம் தான், கருணாநிதி குடும்பத்தின் நிதியை வெளிநாடுகளில் கொண்டு சேர்ப்பதில் கால்வாயாகத் திகழ்கிறது.சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுடைய கடமையை பாரபட்சமின்றி, அச்சமின்றி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய தொகையை சட்ட விரோதமாக பெற்ற அனைவரும் சிறைக்கு பின்னால் கம்பி எண்ண வேண்டி வரும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். பிடித்தால் கீழே ஓட்டு போடவும்

அ.தி.மு.க வெற்றி பெற தே.மு.தி.க அவசியம் வேண்டும்




அ.தி.மு.க வெற்றி பெற தே.மு.தி.க அவசியம் வேண்டும்இதனால் ஆட்சியில் பங்கும், துணை முதல்வர் பதவியையும் விஜய்காந்த் கோருவாரேயானால் அதில் நிறைய நியாயம் இருக்கிறது.

அவருடைய கோரிக்கையை நாம் அரசியல்ரீதியாகத்தான் பார்க்கிறோம். ஈழப்பிரச்சினை உட்பட எத்தனையோ பிரச்சனைகளில் ஜெயலலிதாவும் சோ அவர்களும் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள். அ.தி.மு.கவைத் தோற்றுவித்த அமரர் எம்.ஜி.ஆரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு நேர் எதிராகத்தான் இன்றைக்கு அந்தக் கழகம் செயல்படுகிறது. தேர்தல் காலங்களில் மட்டும் அந்தக் கழகத் தலைமைக்கு எம்.ஜி.ஆரின் நினைப்பு வரும்.

சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகள் அமையப் போகின்றன. ஒன்று தி.மு.க. அணி. இன்னொன்று அ.தி.மு.க. அணி. காங்கிரஸ் கட்சியை தமது அணிக்குக் கொண்டுவர அ.தி.மு.க. தலைமை கடும் முயற்சி செய்தது. ஏற்கனவே அந்தக் கழகத்திடம் நிரம்பப் பாடம் கற்றுக்கொண்ட காங்கிரஸ், அதற்கு உடன்படவில்லை.

எனவே இப்போது மீண்டும் வாயிலுக்கு வெளியே காத்திருக்கும் கட்சிகளை அழைத்து அணி காண அ.தி.மு.கழகம் முயற்சிக்கிறது. ஆனால் இன்றுவரை கழகத்துக் கதவை கேப்டனின் தே.மு.தி.க. தட்டிக் கொண்டிருக்கவில்லை. காரணம் அதன் வலிமை. கவுரவமான உடன்பாட்டை அந்தக் கட்சி எதிர்பார்க்கலாம். அப்படி எதிர் பார்ப்பது நியாயமும்கூட.
ஏனெனில் அ.தி.மு.க. அணியில் இடம் பெற வரிசையில் நிற்கும் எந்தக் கட்சிக்கும் 5 சதவிகித வாக்குகள் கூட இல்லை. அந்தக் கட்சிகளுக்கு அடையாளங்கள் உண்டு. அவ்வளவுதான். சுருங்கச் சொன்னால் பெருங்காயம் இருந்த பாத்திரங்கள்.
கேப்டனின் தே.மு.தி.கவுக்கு மட்டும் தான் தமிழகம் தழுவிய அளவில் எல்லா தொகுதிகளிலும் பத்து சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் உண்டு. எனவே அதற்குரிய மரியாதையை கேப்டன் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அந்த மரியாதை எப்படி இருக்க வேண்டும் என்பதனையும் அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்.
"தன்மானத்தை இழந்து கூட்டணி கொள்ளமாட்டோம். ஒரு தேர்தல் வெற்றிக்காகத் தொண்டர்களை அடகு வைக்கமாட்டேன்' என்று அவர் முரசறைந்து வருகிறார். எனவே அ.தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க. வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?. குறைந்தபட்சம் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் கேப்டனின் மரியாதைக்குப் பங்கம் வந்து விடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை அ.தி.மு.க. தலைமையிடம் அவர்கள் பெற வேண்டும். ஏனெனில் சுயமரியாதையை இழந்து கூட்டணி கொள்ள மாட்டோம் என்பதனை கேப்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அ.தி.மு.கவோடு உடன்பாடு கண்ட சோனியா காந்தி எத்தகைய கொடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் என்பதனை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலின்போது மதுரையில் செல்வி ஜெயலலிதா பேசுகிறார். ம.தி.மு.க. தலைவர் மேடையில் அல்ல, மேடைக்கு எதிரே ஆடியன்ஸோடு ஆடியன்ஸாக, மக்களோடு மக்களாக உட்கார வைக்கப் பட்டார். அந்தக் கதி கேப்டன் அவர்களுக்கு ஏற்படாது என்று சோ போன்றவர்கள் அ.தி.மு.க. தலைமையைக் கேட்டுச் சொல்ல வேண்டும். தெரியாத்தனமாக அ.தி.மு.க. அணிக்குப் போய் குறுகிய காலத்தில் நிறைய பாடங்கள் படித்து தப்பித்து வந்தது விடுதலைச் சிறுத்தைகள் தான். அதனால்தான் இந்த ஆண்டு எங்கள் ஆண்டு என்று அவர்கள் தலை நிமிர்ந்து சொல்கிறார்கள்.

செல்வி ஜெயலலிதாவும் கேப்டன் சாரும் கூட்டாகத் தமிழகம் முழுமையும் ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்தால் ஓரளவு பலனை எதிர்பார்க்கலாம்.

தி.மு.க. கூட்டணிக்குக் கண்களுக்குத் தெரியாத மிகப்பெரும் வலிமை இருக்கிறது. அந்த வலிமைதான் மக்கள் செல்வாக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி அரசு செய்த மக்கள் நலப்பணிகள் அரசியல், கட்சி எல்லைகளை உடைத்துக் கொண்டு அந்த மகத்தான செல்வாக்கை தி.மு.கவுக்கு தேடித் தந்திருக்கிறது.

தமிழக அரசு செயல்படுத்தியதில் 10 சதவீதப் பணிகளைத்தான் பீகாரில் நிதிஷ்குமார் அரசு செயல்படுத்தியது. அவருடைய கூட்டணியே மகத்தான வெற்றி பெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. அணி எத்தகைய வெற்றி பெறும் என்று சொல்லத் தேவையில்லை.

தி.மு.க. ஆட்சி அமைத்தால் அதில் தாங்கள் அங்கம் பெறவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஈடாக வலிமை கொண்ட தே.மு.தி.க. அதேபோல் ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று கோருமானால் அதில் நிரம்ப நியாயம் இருக்கிறது.

வெறும் 50 சீட்டுகளுக்காக அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம்பெறுமானால் அந்தக் கட்சி தனது எதிர்காலத்தை ம.தி.மு.கவைப் போல் இழந்துவிடும். சுயமரியாதையையோ, தன்மானத்தையோ விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இதுவரை கேப்டன் சார் சொல்லி வந்தது தேர்தல்கால வெற்று முழக்கம் என்று ஆகிவிடும்.

குறுகிய காலத்தில் தே.மு.தி.க. அபரிமிதமான மக்கள் செல்வாக்கைப் பெற்ற அரசியல் இயக்கம். இன்னும் அதற்கு எதிர்காலம் உண்டு. எனவே எடுத்து வைக்கின்ற அடி அழுத்தமாக இருக்கவேண்டும். எச்சரிக்கையாக இருக்க வே
ண்டும்.



பிடித்தால் கீழே ஓட்டு போடவும்