Thursday, February 3, 2011

ராஜா கைது மக்களை ஏமாற்றும் செயல் : ஜெயலலிதா



சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவின் கைது, மக்களையும் சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா கூறியதாவது : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவின் கைது செய்த மத்திய அரசின் நடவடிக்கை மக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்றும் செயல்; இதில் எனக்கும், அதிமுகவிற்கு சிறிதும் உடன்பாடு இல்லை; திருப்தி தரும் வகையிலும் இல்லை; 2ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம், கபில்சிபில் ஆகியோர் கூறிய பேச்சுக்கள் முரண்பாடாக உள்ளது; ஆகவே இதற்கு ஜெ.பி.சி., தான் இறுதி தீர்வு. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஜெயலலிதா இவ்வாறு ‌பேசினார்.