Thursday, March 31, 2011

தேவை இலவசக் கல்வி.. லேப்டாப் அல்ல!


ற்போது நடந்து வரும் அரசியல் கூத்துகளில் மிக முக்கியமானது, இலவச அறிவிப்புகளே.

இந்தத் தேர்தல் போட்டியில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு 'இலவச' வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன.

தாய்மார்களுக்காக மிக்சி, கிரைண்டர், மின்விசிறியும் அடுக்கப்பட, இளைய சமுதாய வளர்ச்சிக்காக என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இலவச லேப்டாப் திட்டம்!

இலவச வண்ணத் தொலைக்காட்சி எந்த அளவுக்கு கள்ளச் சந்தைகளில் விற்கப்பட்டதோ அதே அளவுக்கு இந்த லேப்டாப்பும் விற்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

எது எப்படி இருப்பினும் இன்றைய இளைய சமுதாயம் முன்னேற இது அவசியம் தானா? என்ற கேள்வியை தொடுத்தால் இதை விட 'அடிப்படை அவசியம்' ஒன்று நம் கண்களில் படுகிறது.

அதுவே, இலவசக் கல்வி.

இன்றைய இளைய தலைமுறையே நாளைய தூண்கள். அவர்கள் அனைவருக்கும் தேவை தரமான கல்வி மட்டுமே.

தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிப் படிப்பைத் தாண்டி படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளன. அவர்களுக்கு எல்லாம் ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற நினைப்பு உண்மையிலேயே இந்த அரசியல் கட்சிகளுக்கு இருந்தால், அவர்கள் மனதில் எழக்கூடிய முதல் திட்டம் 'அனைவருக்கும் இலவசக் கல்வி' என்பதாக மட்டுமே இருக்கும்.

சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தனது ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் கொடுத்திருந்த ஒரு குறிப்பு மிகவும் சிந்திக்க தகுந்தது.

'பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் இலவச மேற்படிப்பை அரசு அளிக்க முன்வருமேயானால், ஆண்டொன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ.20,000 சராசரி செலவாக எடுத்துக் கொண்டால், முதல் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து ரூ.2,000 கோடியும், இரண்டாம் ஆண்டு இரண்டு ஆண்டு மாணவர்களுக்கும் மொத்தமாக ரூ.4,000 கோடியும், மூன்றாவது வருடம் மூன்று ஆண்டு மாணவர்களுக்கும் சேர்த்து ரூ.6,000 கோடியும் செலவாகும். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் மொத்தமாக ரூ.8,000 கோடி செலவு ஏற்படும்.'

இதுதான் அவரது சிந்தனை. இதனை கல்வி கற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சுலப தவணையில் திருப்பி செலுத்துமாறு செய்தால் அரசுக்கு முதல் கிடைத்து விடும். அதன் வட்டியாக ஏழை மாணவனின் வாழ்க்கை மேம்படும்!

இத்தகைய திட்டத்தால் வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்கிட முடியும். கல்வியறிவு இல்லாதவரே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை நம்மால் எதிர்காலத்தில் கொண்டு வந்துவிட முடியும்.

இதனை அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் செயல்படுத்தினால், அத்தனை பேரும் அரசுப் பள்ளியை தேடி வருவர். கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் காணாமல் போய்விடும்.

ஆனால், இதைப் போன்ற திட்டத்தை எந்த தமிழக கட்சியும் சொல்ல முயலவில்லை. அரசியல்வாதிகளில் பலரும் ஒரு வகையில் கல்வி தந்தை ஆகவும், சுயநிதி பல்கலைகழகத் துணைவேந்தர்களாகவும் இருப்பதால் தங்கள் கல்வி வியாபாரம் பாதிக்கும் என்று இப்படிச் சிந்திக்கவில்லை போலும்.

கல்வி அறிவைக் கொண்டு வந்தால், தமிழன் சிந்தித்து விடுவான். அதன்பின் இந்த இலவச ஏமாற்று வேலைகள் எல்லாம் எடுபடாது அல்லவா!?

இந்த இலவசங்களை கொடுத்து மக்களின் முன்னேற்றம் பற்றி எண்ணாமல் ஏமாற்ற துணியும் அரசியல் வியாபாரிகள், ஆபிரகாம் லிங்கனின் கூற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

"மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துவதே மக்களாட்சி."

*

(தேர்தல் தொடர்பாக வாசகர்கள் தங்கள் கட்டுரையை news@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.)

Wednesday, March 30, 2011

அனுதாபம் மூலம் ஆட்சியை தக்கவைக்க கருணாநிதி சதித்திட்டம்: ஜெயலலிதா


திருவாரூர் : ""அனுதாபம் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கருணாநிதி சதித்திட்டம் தீட்டுகிறார்,'' என, திருவாரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெ., பேசினார்.


திருவாரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா பேசியதாவது:எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சியைப்போல, கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு எதிராக நீங்கள் எல்லாம் எழுச்சியுடன் கூடியிருக்கிறீர்கள். கருணாநிதி, தமிழர்களை வஞ்சித்தவர்; கச்சத்தீவை தாரை வார்த்தவர், மீனவர்கள் தாக்கப்படுவதை தட்டிக் கேட்காதவர், நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்தவர், லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக்கொடுத்தவர்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் தலைக்குனிவை ஏற்படுத்தியவர்.


இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தவர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர், "2ஜி' மூலம் கொள்ளையடித்த பணம் 1.76 லட்சம் கோடி ரூபாய். இதை முதலீடு செய்து சம்பாதித்த பணம் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவால், பெரம்பலூர் மாவட்டத்தில் 1,000 ஏக்கருக்கு மேல் வாங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களிடமிருந்து ஏக்கர் ஒன்று 60 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, சில மாதங்களில் பெரிய கம்பெனிகளுக்கு ஏக்கர் ஒன்று 18 லட்சம் வீதம் விற்கப்பட்டுள்ளது. ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம் 180 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


ஒரு மாவட்டத்தில், ஒரு பகுதியில் மட்டும் நிலம் வாங்கி விற்கப்பட்ட வகையில் 174 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இதே நிலை தான். பெரம்பலூரில் வெறும் 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலத்தை விற்ற மக்களால், தற்போது ஒரு கிரவுண்டு நிலம் கூட வாங்க முடியவில்லை. தற்போதையை விலைவாசி உயர்வு என்பது இயற்கையானது அல்ல. கருணாநிதி குடும்பத்தினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது.அனைத்து அரசு திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 1971-76 வரை கருணாநிதி முதல்வராக இருந்த போது, வீராணம் ஊழலில் உயிரை இழந்தவர் கான்ட்ராக்டர் சத்தியநாராயணரெட்டி. 1989-91ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது அவரிடம் நெருக்கமாக இருந்த டி.ஜி.பி., துரை மர்மமாக இறந்தார்.


கடந்த 1996-2001ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது மேம்பால ஊழல் காரணமாக, சென்னை ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்த முறை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக சாதிக் பாட்சா உயிர் பறிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பது கருணாநிதி குடும்பம். <பலியாவதோ உங்களில் ஒருவர். தன் மக்களுக்காக வருமானத்தை ஈட்டும் கருணாநிதி, ஆட்சி அதிகாரம் போய்விடுமோ என்று பயந்து தமிழக மக்களுக்காக தன்னை தேர்ந்தெடுக்கமாறு பேசி வருகிறார். தமிழகத்தின் எதிர்கால தலைமுறையினர் வாழ்க்கை பாதுகாப்பாகவும், பிரகாசமாகவும் இருக்க நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஓட்டுப்போடுவதற்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க., வெற்றி உறுதிப்படுத்தி வருகிறது. எப்படியாவது தக்க வைத்துக்கெள்ள வேண்டும் என்பதற்காக கடைசி கட்டமாக கபட நாடகமாட முயற்சித்து வருகிறார். இதன்படி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாப ஓட்டுக்ளை பெறுவது, அல்லது மகள் கனிமொழியை யாரோ ஒருவர் தாக்கியதாக நாடகமாடி அதன் மூலம் அனுதாபத்தை பெறுவது, இல்லையென்றால் வன்முறையை கட்டவிழ்த்து விடப்போவதாக தகவல்கள் வருகின்றன. கூட்டணிக்கட்சிகள் வன்முறையில் இறங்காமல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு <ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


அ.தி.மு.க., வேட்பாளர்கள் சீர்காழி சக்தி, பூம்புகார் பவுன்ராஜ், நாகப்பட்டினம் ஜெயபால், வேதாரண்யம் காமராஜ் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், மயிலாடுதுறை தே.மு.தி.க., வேட்பாளர் அருள்செல்வனுக்கு முரசு சின்னத்திலும், கீழ்வேலூர் மா.கம்யூ., வேட்பாளர் மகாலிங்கத்திற்கு அரிவாள் சுத்தி நட்சத்திரம் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


திருவாரூரில் பேசியதையே புவனகிரி மற்றும் கடலூரில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெ., பேசினார். கடலூரில் உள்ள பிரச்னைகள் குறித்தும், புவனகிரி பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அவர் பேசியதாவது:ரயில்வே சுரங்கப்பாதை: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கடலூர் லாரன்ஸ் சாலை ரயில்வே சுரங்கப்பாதை திட்டமும், பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும். கடலூர் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு, மீனவ மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். கடலூர் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், புறவழிச்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கென்று தனியாக தொழில்நுட்ப கல்லூரியும், பட்டய கல்லூரியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இதேபோன்று குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பிரச்னைகளையும் நான் அறிவேன். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நிரந்தர வெள்ள தடுப்பணை: புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் என்.எல்.சி.,க்கு இடம் கொடுத்தவர்களின் பிரச்னையை அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைப்போம். புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ள பாதிப்பை தடுக்க வெள்ளாற்றின் கரைகள் பலப்படுத்தப்படும். வெள்ளாற்று வழியாக கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணையும், நிரந்தர வெள்ள தடுப்பணை கட்டப்படும்.காவனூர் - கள்ளிப்பாடிக்கு இடையே வெள்ளாற்றிலும், தேவன்குடி - புத்தூர் இடையே மணிமுத்தாற்றில் பாலம் கட்டப்படும். சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேட்டிற்கு நிரந்தர தீர்வு காணப்படும். வீராணம் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படும். இதேபோன்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி பகுதிகளில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.

Tuesday, March 29, 2011

தற்போது தேவை ஆட்சி மாற்றம்: விஜயகாந்த்

வேலூர்: ""அ.தி.மு.க., கூட்டணியில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கிறது' என, வேலூரிலும், "தமிழக மக்களுக்கு தற்போது தேவை ஆட்சி மாற்றம்' என, திருவண்ணாமலையிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் விஜய்யை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: சென்னையில் இருந்து மதுரையில் குடியேறிய அழகிரி என்னை பார்த்து ரோஷக்காரன் என்றும், பின்னர் ரோஷம் இல்லாதவன் என்றும் கூறுகிறார். மதுரைக்காரனை பற்றி மதுரைக்காரனுக்கு தான் தெரியும். அவருக்கு தெரியாது. தி.மு.க., கூட்டணியிடம் பணபலம் மட்டுமே தான் உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே உள்ளது. பாலாற்றில் தண்ணீர் கொண்டுவர முயற்சி எடுக்காமல், மணல் கொள்ளை அடிக்கின்றனர். 1967ல் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் இருந்து அண்ணா துரை விரட்டியடித்தார். ஆனால், கருணாநிதி மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் என்னுடைய குறிக்கோள். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள் வாழ முடியாது. ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என்கிறார் கருணாநிதி. கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பர் என்பதே உண்மை.


திருவண்ணாமலை மாவட்டம்: தமிழக மக்களுக்கு தற்போது உடனடி தேவை ஆட்சி மாற்றம் தான். திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேலு, ஆர்.எம்.வீரப்பன், ப.உ.சண்முகம் போன்றோரால், எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.எல்.ஏ., ஆனவர். இன்று அவர் எம்.ஜி.ஆர் போட்ட சத்துணவில் சத்து இல்லை என்று கூறுகிறார். இவரை சத்தில்லாதவராக மாற்ற அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். கருணாநிதி பிறந்த நாளுக்கு ஓட்டல்களில், 20 ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறேன் என்று திட்டம் கொண்டு வந்தாரே அது செயல்படுகிறதா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர் இனத்தை குழி தோண்டி புதைத்திட்டவர் கருணாநிதி, இவர் மாறி மாறி பேசி வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றுபவர். மக்களுக்கு தற்போது உடனடி தேவை ஆட்சி மாற்றம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.


கூட்டணியை பிரிக்க சதி: திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திருத்தணி முருகன் துணை வருவான் என்பது போல, தி.மு.க., ஆட்சி மாற்றம் செய்வதற்கும் இந்த முருகன் துணை நிற்பான். நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். மக்களை ஒரு போதும் நான் ஏமாற்ற மாட்டேன். இந்த வெற்றிக் கூட்டணியில் பிரிவினை ஏற்படுத்துவதற்கு சிலர் சதி செய்கின்றனர். தொண்டர்கள் யாரும் இதில் சிக்காமல், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், நமது கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.


தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் கருணாநிதிக்கு பிடிக்காது. தேர்தல் அதிகாரிகள் இன்னமும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். தன்னுடைய மகன், பேரன், மகள் ஆகிய உறவினர்களுக்கு மட்டும் பதவிகளை கொடுத்து குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதன் ரகசியம் காங்கிரஸ் கட்சியில் உள்ள 10 தலைவர்களுக்கு 6 தொகுதிகள் வீதமும், டில்லிக்கு 3 தொகுதிகள் வீதம் கட்சியை கூறுபோடுகின்றனர். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Monday, March 28, 2011

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: ஜெ., ஆவேசம்


கரூர்: ""மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கொள்ளையில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள் கம்பி எண்ணுவார்கள்,'' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.


கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கரூரில் நேற்று பகல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போது நடக்கும் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. தமிழக மக்களை விடுதலை பெற வைக்கும் தேர்தல். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, விலைவாசி உயர காரணமாக இருந்தார். அரிசி, பருப்பு விலையேற்றம், டீசல் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்தார். கடந்த ஓராண்டில் மட்டும் ஒன்பது முறை பெட்ரோல் விலையேற்றப்பட்டு, 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


மாநிலத்தில் மணல் கொள்ளை மட்டும் அமோகமாக நடக்கிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கருணாநிதி குடும்பத்துக்கு செல்கிறது. கிரானைட் விற்பனையில் 80 ஆயிரம் கோடி என , நாட்டை கொள்ளை அடிக்கின்றனர். ஐந்தாண்டுக்கு முன் மணல் லோடுக்கு, 2,500 ரூபாய் என, விற்பனையானது. தற்போது, 13 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. 150 ரூபாய்க்கு விற்பனையான சிமென்ட் விலை தற்போது, 280 ரூபாய். மூன்று ரூபாய்க்கு விற்பனையான செங்கல், ஆறு ரூபாய் என்றாகி விட்டது. மக்கள் கனவில் தான் இனி வீடு கட்ட வேண்டும். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆனால், மின்வெட்டு அதிகரித்துள்ளது. விவசாயம், தொழிற்சாலை மற்றும் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு குறைந்து போனது.


தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்றாகிவிட்டது. அதே சமயம் "ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஊழலில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசு இதழில் வெளியிட கருணாநிதியால் முடியவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்தும் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வக்கில்லை.


ஏழை மக்கள் நிலம் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டு, அதிக விலைக்கு பணக்கார முதலாளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்ட பிரச்னையான மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கொள்ளையில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள் கம்பி எண்ணுவர். மின்வெட்டு அடியோடு நிறுத்தப்படும். சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும். விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும். அடிப்படை தேவை பூர்த்தி செய்யப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். பகல் 2.25 மணிக்கு பேச துவங்கிய ஜெயலலிதா, 2.55 மணிக்கு முடித்தார்.

Sunday, March 27, 2011

"கருணாநிதியால் ஓட்டுக்கு ரூ.1 லட்சம் தரமுடியும்'': ஜெ., "திடுக்''


திருச்சி: திருச்சியில் மூன்று நாள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா மூன்றாம் நாளான நேற்று இலவச அஸ்திரத்தை கையிலெடுத்தார். ""ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கருணாநிதியால் தரமுடியும்; அதை வாங்கிக் கொண்டு மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்,'' என்று ஜெயலலிதா பேசினார்.


அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட ஸ்ரீரங்கம் நில சீர்திருத்தம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் தன் முதல் நாள் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, இரண்டு நாட்களாக 70 கி.மீ., தூரம் பயணம் செய்தார். மூன்றாம் நாளான நேற்று திருச்சி புத்தூர் நால்ரோட்டில் பிரச்சாரத்தைத் துவக்கினார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள, 24 இலவசங்கள் பற்றி கடந்த இரண்டு நாள் பிரச்சாரத்தில் குறிப்பிடவில்லை. மூன்றாம் நாள் பிரச்சாரமான நேற்று ஜெயலலிதா, இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து பேசினார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நேற்று முன்தினத்தை விட நேற்று ஏராளமான தொண்டர்கள், மக்கள் ஜெயலலிதாவை காண கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் காத்திருந்தனர். மாலை 5 மணிக்கு சங்கம் ஹோட்டலிலிருந்து புறப்பட்ட ஜெயலலிதா புத்தூர் நால்ரோட்டில் தன் பிரச்சாரத்தை துவக்கினார்.


திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சைக்கு ஓட்டு கேட்டு, ஜெயலலிதா பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை மூலம் கருணாநிதி குடும்பம் கோடிகளை குவித்துள்ளது. கருணாநிதி, மக்கள் பணத்தைச் சுரண்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார். திரைப்படத்துறையில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை ரவுடிக்கும்பல் தான் ஆட்சி செய்கிறது. இந்நிலை தொடர வேண்டுமா? திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., அமைச்சர் நேருவுக்கு தெரியாமல் மாவட்டத்தில் எந்த நிலமும் விற்கப்படுவதில்லை. "தில்லைநகர் நேருநகர்' ஆகிவிட்டது. நேரு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா? மின்மிகு மாநிலமாக இருந்த தமிழகம் "மின்வெட்டு' மாநிலமாக மாறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. காவல் துறை, கருணாநிதியின் ஏவல் துறையாக மாறிவிட்டது. இந்நிலை மாற வேண்டும். ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தரக்கூடிய அளவுக்கு கருணாநிதியிடம் பணம் உள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பர். அதை வாங்கிக் கொள்ளுங்கள்; மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் மனோகரனுக்கு ஓட்டுகேட்டு சத்திரம் பஸ் ஸ்டாண்டில், இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து ஜெயலலிதா பேசியதாவது: ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற நிலை மாற்றப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரருக்கும், 20 கிலோ அரசி இலவசமாக வழங்கப்படும். மணப்பெண் தாலிக்கு, 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். தாய்மார்களுக்கு இலவசமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும். முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் உதவித் தொகை, 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு சார்பில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து தரப்படும். கரும்பு கொள்முதல் விலை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு, தனியார் பள்ளியில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடனுதவியும், அதில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மூன்று லட்சம் ஏழைகளுக்கு 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 300 சதுரஅடியில் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். வீடில்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் தரப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், 6,000 கிராமங்களில் 60 ஆயிரம் கறவைமாடுகள் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


"ஸ்பெக்டரம்' ஆம்னிவேன்'': முதல்வர் கருணாநிதி குடும்பத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் உலுக்கியெடுத்த "ஸ்பெக்டரம்' குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து ஒவ்வொரு மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று அவர் பிரச்சாரம் செய்த திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் "ஸ்பெக்டரம்' ஊழலை விளக்கும் வகையில் ஆம்னிவேன் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், தொலைத்தொடர்பு சாதனங்கள் அலங்கரிக்கப்பட்டு, "ஸ்பெக்டரம்' ஊழல் தொகையான ரூ.1,76,000 லட்சம் கோடி என எழுதப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வேனுக்கு முன் நின்று அனைவரும் "ஃபோட்டோ' எடுத்துக் கொண்டனர்.

கதாநாயக தேர்தல் அறிக்கைக்கு சவால் விடும் மின்வெட்டு வில்லன்

தி.மு.க., அரசு கடந்த 2008 செப்., 1ம் தேதி அறிமுகம் செய்த, "மின் தடை' கதாநாயகனிடம் சிக்கி, நான்கு ஆண்டுகளாக மக்கள் திண்டாடும் நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் அறிமுகம் செய்துள்ள தேர்தல் கதாநாயகி, மின் வாரிய அதிகாரிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகளையும் கொண்டு, 10 ஆயிரத்து 214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மின் உற்பத்தியை விட மின் நுகர்வு அதிகரித்ததால் பற்றாக்குறையை சமாளிக்க வாரியம், 2008 செப்., 1 முதல் 2 மணி நேர மின் தடையை நடைமுறைப்படுத்தியது. இதுவரை புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் உற்பத்தி துவங்கவில்லை. ஐந்தாண்டுகளில் தமிழக அரசு, 41 லட்சத்து 28 ஆயிரம் இலவச கலர், "டிவி'க்களை வினியோகம் செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 18 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. 2011 டிசம்பருக்குள் கூடு தலாக, 50 ஆயிரம் விவசாய இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு வழங்கும் இலவச மின்சாரத்தால், தேவையை விட உபரியாக மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது. அதனால், தமிழகத்தின் மின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. மூன்று மாதங்களுக்கு முன், 9,500 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை, தற்போது, கோடை துவங்கி விட்டதால், 11 ஆயிரத்து 300 முதல், 11 ஆயிரத்து 500 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது. பற்றாக்குறை சமாளிக்க பெரும்பாலான இடங்களில் மூன்று மணி நேரம், முதல் நான்கரை மணி நேரம் வரை மின் தடை அமல்படுத்தப்படுகிறது.


கோடை காலம் என்பதால், வெளி மாநிலங்களிலும் தேவையான மின்சாரம் பெற முடியவில்லை. அதை சமாளிக்க, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திடீர், திடீரென மின் தடை செய்யப்படுகிறது. நெய்வேலி பிரிவு 2, ராமகுண்டம் பிரிவு 2 உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மின் பங்கீட்டில் இருந்து கூடுதலாக, 1,000 மெகா வாட் மின்சாரம் பெற வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. எனவே, மார்ச் 25 முதல் மின் வினியோகம் சீராகும் என, வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 11 ஆயிரத்து 500 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளதால், குறைந்த பட்சம் 2 மணி நேர மின் தடை தொடரும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு கதாநாயகி என கூறும் தேர்தல் அறிக்கையில், "மிக்சி, கிரைண்டர்' வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்கினால், மின் தேவை மேலும் அதிகரிக்கும். பெரும்பாலான குடும்பத்தினர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் காலை, மதியம், இரவு குறிப்பிட்ட நேரத்தில் தான் மிக்சி, கிரைண்டரை உபயோகிப்பர் என்பதால், பீக்ஹவர் நேரத்தில் மின் தேவை மேலும் உயரும் நிலை உருவாகும். தேர்தல், "கதாநாயகி' யால், மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்பதால், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.


விவசாயிகள் விரக்தி: தேர்தல் நேரத்தில் கூட, ஒரு நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே விவசாய கிணறுகளுக்கு மும்முனை (த்ரீ பேஸ்) மின்சாரம் வழங்குவதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தினமும் நகர்ப்புறங்களில் மூன்று மணி நேரமும், கிராமப் புறங்களில் 5 மணி நேரமும் மின் தடை ஏற்படும் என, மீண்டும் மின் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவு நேரத்தில் 4 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் கடந்த ஒரு மாதமாக மும்முனை மின்சாரம் பாதியாகக் குறைக்கப்பட்டது.


விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் வழங்காததால், கடன் வாங்கி பயிர் செய்துள்ள நெல், வேர்கடலை, கரும்பு, சவுக்கு மற்றும் பூக்கள் போன்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகின்றன. விவசாய கிணறுகளுக்கு பகல் நேரத்தில் 2 மணி நேரம், இரவு நேரத்தில் 2 மணி நேரம் என, நான்கு மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குகின்றனர். சீரான மின்சாரம் வழங்கக் கோரி விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், எந்தவித பதிலும் பயனும் இல்லை. வெறுப்படைந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர், ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் தங்கள் முடிவை தெரிவிக்க உள்ளனர்.

Saturday, March 26, 2011

இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: ஜெ., புது வாக்குறுதி


திருச்சி: ""கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இஸ்லாமியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.


அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நேற்று மாலை 5 மணிக்கு தன் இரண்டாம் நாள் பிரசாரப் பயணத்தை துவக்கினார். திருச்சி கருமண்டபம், புங்கனூர், ராம்ஜி நகர் மில் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது: வெறும் ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் சாதாரண தேர்தல் இல்லை. தமிழக மக்களின் விடுதலைக்கான தேர்தல். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்கள், பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஐந்தாண்டாக ரவுடிக் கும்பல், தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. ஐந்தாண்டு தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினாரா? இல்லை. ஐந்தாண்டில் ஒன்பது முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுக்கு முன் வெறும் 15 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரிசி 42, 13க்கு விற்ற சர்க்கரை 35, 28க்கு விற்ற துவரம் பருப்பு 90, 35க்கு விற்ற புளி 110, 38க்கு விற்ற பூண்டு விலை 250 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது.


தமிழகத்தில் தொடரும் மின்வெட்டால், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. அரசு துறைகளில் ஊழல் பெருகிவிட்டது. தமிழகம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. ஆனால், "ஸ்பெக்ட்ரம்' மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி குடும்பம் கொள்ளையடித்துள்ளது. கருணாநிதி குடும்பம், "ரியல் எஸ்டேட்' தொழிலைத் தான் செய்கிறது. என் ஆட்சியில் தான் சிறுபான்மையினர் நலத்துறை முதல் முறையாக திருத்தியமைக்கப்பட்டது. 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தார்; இதையும் முறையாக அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப்படும்; இஸ்லாமியர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம். மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். இவ்வாறு ஜெ., பேசினார்.

Friday, March 25, 2011

ஆட்சி அதிகாரத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை: விஜயகாந்த் பேச்சு


திருக்கோவிலூர்: ""நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை ரோட்டில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை 4.35 மணிக்கு தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்.


காங்., கட்சியில் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசியல். கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி அரசை தெய்வம் காலி செய்யும். ராமதாஸ், கருணாநிதிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இப்ப சொல்றார் கருணாநிதி ஹீரோவாம். இது கொள்கை கூட்டணி இல்லை, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டணி. இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறி நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.


மதுரைக்கு வந்து பிரசாரம் பண்ணிப்பார் என்று அழகிரி கூறுகிறார். மதுரைக்கு பிரசாரத்துக்கு வருவேன். இந்த உருட்டல் மிரட்டல தான் உங்க ஆட்சி நடந்துட்டு இருக்கு அது என்கிட்ட செல்லாது. ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். ஏன் ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தேன் என்பதை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.


"தினமலர்' இதழில் வெளியான செய்திபடி, நான் கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார், சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான். சிவன் எப்படி தனது மனைவிக்கு சரிபாதி அளித்தாரோ, அதேபோல் எனது மனைவிக்கு நானும் சமஉரிமை அளித்துள்ளேன். சிவன் அதர்மத்தை அழிப்பவர். அதனால், கருணாநிதியின் அதர்மத்தை அழிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிக்கேட்டால் கடந்த ஆட்சியில் நீங்கள் செய்யவில்லையா என கேட்டு திசை திருப்புகிறார். கடந்த, 1967ல் காங்., கட்சிக்கு எதிராக ஏழைகள் அனைவரும் தேர்தலில் நிற்க வேண்டும் என அண்ணாதுரை வாய்ப்பளித்தார். இப்போது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க., வில் தேர்தலில் "சீட்' தரப்படும் அவலம் உள்ளது. நான் ஆறாவது முறையாக முதல்வராக வேண்டும் அதனால், எனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுவதாக கருணாநிதி கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் திருவாரூர் தெரியவில்லையா? கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் தொடருவார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த நன்மையும் அவர் செய்யமாட்டார். காங்., கட்சிக்கு 63 சீட் கொடுக்க முடியாது என்று கூறிய கருணாநிதி, அதன்பின் எப்படி ஒதுக்கினர். தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம், என்றார்.


"முரசு' சின்னம் கிடைக்குமா? ""தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது,'' என விருதுநகர் தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தே.மு.தி.க., கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 41 தொகுதிகளில் முரசு சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்,'' என்றார். தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இது வரை தேர்தல் கமிஷன் தே.மு.தி.க., விற்கு "முரசு' சின்னம் ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கவில்லை. சின்னம் ஒதுக்கீடு செய்ய அவகாசம் இருப்பதால் இனிமேல் தேர்தல் கமிஷன் அனுமதிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

Thursday, March 24, 2011

தி.மு.க.,வுக்கு - அ.தி.மு.க., சளைத்தது அல்ல ., இலவச திட்டங்களை வாரி வழங்கினார் ஜெ.,


சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எல்லாமே இலவசங்கள் என்ற கணக்கில் தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., சளைத்ததல்ல என்பதை பறைசாற்றும் வகையில் அ.தி.மு.கவும் மக்களுக்கு கிடைக்கும் இலவச பொருட்களை பட்டியலிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என்ற தி.மு.க., அறிக்கையை மிஞ்சுவதாக காட்டும் வகையில் , பிளஸ்-1, பிளஸ்- 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். என்றும் தி.மு.க., அறிக்கையில் இடம் பெறாத புதிய இலவசமாக ஆடு, மாடுகளும் கிடைக்கும் என்றும் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை கவர முனைந்துள்ளது.


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


தேர்தல் அறிக்கை முழு விவரம் வருமாறு: மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ்- 1, பிளஸ் - 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். கேபிள் டி.வி., அரசுடைமையாக ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.


பேன், மிக்சி, கிரைண்டர் : அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.


மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கெ?ள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தெ?ழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும். இலவசங்கள் வழங்குவதில் தி.மு.க.,விற்கு அ.தி.மு.க., சளைத்ததல்ல் என்பதை இக்கட்சியும் நிரூபித்துள்ளது.


நன்றி


தினமலர்

Wednesday, March 23, 2011

யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்


இன்னும் 21 நாட்களில் நிர்ணயிக்கப்பட்டுவிடும், தமிழகத்தின் தலையெழுத்து. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் கையில் ஆட்சிப் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் வகையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளின் சாதக, பாதகங்கள் குறித்த ஓர் அலசல்:

தி.மு.க., அணி: இந்த அணியில் பிரதான கட்சியான தி.மு.க.,விற்கு கடந்த சட்டசபை தேர்தலில், 26.40 சதவீத ஓட்டுகள் கிடைத்த. இந்த அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், 8.38 சதவீத ஓட்டுகளையும், பா.ம.க., 5.55 சதவீத ஓட்டுகளையும், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், 1.29 சதவீத ஓட்டுகளையும் பெற்றன. இந்த அடிப்படையில், தற்போதைய தி.மு.க., அணிக்கு மொத்தம் 41.62 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முந்தைய ஓட்டுப்பதிவு சதவீதம், இந்த முறையும் அப்படியே எதிரொலிக்காது என்றாலும், கட்சிகளின் அடிப்படை ஓட்டு வங்கியை இதன் மூலம் கணிக்க முடிகிறது.


சாதகங்கள்: காங்கிரஸ் எந்த அணியோடு சேர்கிறதோ, அந்த அணி தமிழகத்தில் வெற்றி பெறும் என்ற பழைய வரலாறு. பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகளுக்கு வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி, அவர்களை ஓட்டு வங்கியாக மாற்றி வைத்திருப்பது. முந்தைய தேர்தல்களை விட பெருமளவு செலவு செய்யத் தயாராய் தி.மு.க., தலைமை களமிறங்கியிருப்பது கூடுதல் பலம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி, கலர் "டிவி' போன்ற நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்று, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கிரைண்டர் அல்லது மிக்சி, முதியோருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பாதகங்கள்: 1989ம் ஆண்டு முதல், மக்கள், ஆட்சி மாற்றத்துக்குத் தான் ஓட்டளித்திருக்கின்றனர். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இலங்கை விவகாரம், மீனவர் பிரச்னை, குடும்ப அரசியல், பால் கொள்முதல் விலை, கள் இறக்க அனுமதி போன்ற பல பிரச்னைகள் பாதகங்களின் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. 1996க்குப் பிறகு, பெரிய அளவில் எழுந்துள்ள ஆட்சி மீதான அதிருப்தி அலை. பிரதான கூட்டணி கட்சியான காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட மோதலால் உற்சாகம் குறைந்த தொண்டர்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., ரெய்டு, சாதிக் பாட்சா தற்கொலை உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த பிரசார தீனியா மாறியுள்ளன.

அ.தி.மு.க., அணி: கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 32.52 சதவீத ஓட்டுகளையும், கடந்த முறை தி.மு.க., அணியில் இருந்த மார்க்சிஸ்ட், 2.64 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட், 1.59 சதவீதமும் ஓட்டுகளைப் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் தனித்து களமிறங்கி, 8.32 சதவீத ஓட்டுகளைப் பெற்ற தே.மு.தி.க., தற்போது அ.தி.மு.க., அணியில் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், அ.தி.மு.க., அணிக்கு 45.07 சதவீத ஓட்டு இருப்பதாகக் கணக்கிடலாம். லோக்சபா தேர்தலின்போது தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி, 11 சதவீதமாக உயர்ந்தது என்றாலும், அதை குறியீட்டு அளவாக ஏற்க முடியாது. தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு மாற்றாக நினைத்த நடுநிலையாளர்கள், தற்போது அ.தி.மு.க., அணியில் இடம் பெற்றுவிட்ட தே.மு.தி.க.,விற்கு ஓட்டளிக்காமல் போகலாம்.


சாதகங்கள்: நடுநிலையாளர்கள், இளைஞர்கள் ஆதரவு பெற்ற தே.மு.தி.க., உள்ளிட்ட வலுவான கூட்டணி. ஜெயலலிதா, விஜயகாந்த், இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் என வலுவான பிரசார பிரமுகர்கள் இருப்பது.


பாதகங்கள்: கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் நடந்த கடைசி நேர குளறுபடிகள். ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்காததும், பிரசாரப் பீரங்கியான வைகோவை இழந்ததும் ஓட்டிழப்பை ஏற்படுத்தும். ஆளுங்கட்சிக்கு எதிராக எத்தனையோ விவகாரங்கள் இருந்தாலும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல அவகாசம் இல்லாமை. தி.மு.க.,விற்கு இணையாக செலவு செய்ய முடியாத நிலை. "கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் எண்ணிக்கை, கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்கள், சமீபத்திய லோக்சபா தேர்தல் முடிவுகள், அதில் கட்சிகள் பெற்றுள்ள ஏற்ற இறக்கங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தால், ஓட்டு வங்கி என்ற அடிப்படையில் அ.தி.மு.க., அணி 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.


முடிவு எப்படி: அதையும் தாண்டி, ம.தி.மு.க., - பா.ஜ., - ஐ.ஜே.கே., - நா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் ஓட்டுகள், எந்தக் கூட்டணியின் ஓட்டுகளைச் சிதைக்கின்றன என்பதைப் பொருத்து, இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு அமையும்!

Tuesday, March 22, 2011

தேர்தலை சந்திக்க தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தயார்

சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தயாராகி விட்டன. நீண்ட இழுபறிக்கு பின் நேற்று தொகுதிகளை பிரிக்கும் சிக்கல் தீர்ந்ததால், அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தேர்தல் களம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.


அடுத்த மாதம் 13ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, நாளை (23ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன.


அதே நேரத்தில், அ.தி.மு.க., அணியில் முதலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டாலும், தே.மு.தி.க.,விற்கு தொகுதிகளை பங்கீடு செய்து கொடுப்பதில் இழுபறி நீடித்தது.
தே.மு.தி.க.,விற்கு முதலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில், சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு தொகுதிகள் கூட இடம் பெறவில்லை. இதனால், அந்த மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்நிலையில், நேற்று காலையில் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் கூட்டம், விஜயகாந்த் தலைமையில் நடந்தது. கூட்டம் நடந்த அலுவலகத்திற்குள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை; வெளியே பூட்டப்பட்டிருந்தது.அ.தி.மு.க., ஒதுக்கிய தொகுதிகளில் போட்டியிட விரும்பிய விருப்ப மனுக்களை, விஜயகாந்த் பரிசீலனை செய்தார். அதன் பின், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொகுதி பங்கீடு குறித்த சிக்கல் நேற்று மதியம் தீர்க்கப்பட்டதும், தங்கள் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதாவும், விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பாகியுள்ளது.


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை? தி.மு.க., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேர்தல் பிரசாரம் கிளம்பும் முன், தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டணி பிரச்னை காரணமாக, பிரசார தேதி தள்ளி வைக்கப்பட்டதால் தேர்தல் அறிக்கை வெளியீடும் தள்ளிப்போனது. வரும் 24ம் தேதி, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளிவர வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, March 21, 2011

அ.தி.மு.க., - தே.மு.தி.க., தொகுதிகள் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்



சென்னை: அ.தி.மு.க., - தே.மு.தி.க., தொகுதிப் பங்கீடு குழுவினர்களின் பேச்சுவார்த்தை, போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இல்லத்தில், நேற்று முன்தினம் விடிய விடிய நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு, தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதி களுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.


அ.தி.மு.க., அணியில், தே.மு.தி.க.,வுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தையில், இரு கட்சிகள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டது. கடந்த, 18ம் தேதி இரவு முழுவதும், போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில், விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 10 தொகுதிகள் அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கியது. அ.தி.மு.க., தொகுதிப் பங்கீடு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பாலகங்காவுடன் தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலர் சுதீஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தது. தொடர்ந்து, 13 மணி நேரத்திற்கு பின், தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.


பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறும்போது, "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 41 தொகுதிகள் அடையாளம் கண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. இதை, எங்கள் கட்சித் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கு எடுத்துச் செல்வோம். அவர் சரிபார்த்து, அதன்படி இரு தலைவர்களும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்' என்றார்.

பட்டியல் இன்று வெளியீடு: தே.மு.தி.க., தொகுதிப் பட்டியலுடன் வேட்பாளரையும் சேர்த்து வெளியிட அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.


திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், ரிஷிவந்தியம், வானூர், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பென்னாகரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், செஞ்சி, ஏற்காடு, ஓமலூர், எடப்பாடி, குமாரபாளையம், பவானிசாகர், செய்யாறு, ஈரோடு மேற்கு, திருப்பூர் தெற்கு, பண்ருட்டி, நெய்வேலி, திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, திருப்பரங்குன்றம், அருப்புக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், அம்பாசமுத்திரம், ராதாபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், கொளத்தூர், அண்ணா
நகர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளை தே.மு.தி.க., கேட்டிருந்தது.


இவ்வாறு, 45 தொகுதிகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டு, அதில், 41 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், இதில் விக்கிரவாண்டி, திருப்பூர் தெற்கு, திண்டுக்கல், பென்னாகரம், பவானிசாகர் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.இறுதியாக தே.மு.தி.க., கேட்ட, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதமுள்ள 21 தொகுதிகளை அ.தி.மு.க., தலைமை தேர்வு செய்து கொடுத்துள்ளது. தே.மு.தி.க., தொகுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.


ஆனால், கரிநாள் மற்றும் பிரதமை திதி என்பதால், வெளியிடப்படவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்பதாலும், மனு தாக்கல் முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளதாலும், மாற்று வேட்பாளரை கடைசி நேரத்தில் தேர்வு செய்ய முடியாது என்பதாலும், தே.மு.தி.க., தொகுதிப் பட்டியலுடன், வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிட வாய்ப்புள்ளது.தே.மு.தி.க., தரப்பில் விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக தொகுதிகள் கேட்கப்பட்டதால் அதற்கு மாற்றாக சென்னையில் சில தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பிடித்தால் ஒட்டு போடவும்

Sunday, March 20, 2011

கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க.,


தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், பல இலவசங்களை வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம்.
* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.
* அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும்.
* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.
* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.
* அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.
* அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரசின் சார்பில் கேபிள், "டிவி' இணைப்பு வழங்கப்படும்.
* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 30 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* குடும்ப அடடைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு லிட்டர் இலவச மண்ணெண்ணெய்.
* அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.
* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்.
* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க., வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், அதிகாரப்பூர்வமாக இவையெல்லாம் இடம்பெற உள்ளன.

Saturday, March 19, 2011

அ.தி.மு.க., கூட்டணியில் திடீர் திருப்பம் : அனைவரையும் சமாதானப்படுத்தினார் ஜெ.,



அ.தி.மு.க., கூட்டணியில், கடந்த இரு நாட்களாக பெரும் பரபரப்பும், சலசலப்பும் நடந்து வந்த நிலையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. தொகுதி ஒதுக்கீட்டில், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரையும் ஜெயலலிதா நேரடியாக சமாதானப்படுத்தினார். அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது.


அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு 41 இடங்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை, அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவிடம் அளித்திருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது தங்கள் வசம் உள்ள தொகுதிகளை மீண்டும் கேட்டிருந்தனர்.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கடந்த 16ம் தேதி மாலை திடீரென 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இது, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர் பார்த்த பல தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்ததும், அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.


சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். உடனே, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர், நேற்று முன்தினம் தே.மு.தி.க., அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்தை சந்தித்து பேசினர். இதனால், தே.மு.தி.க., தலைமையில், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மூன்றாவது அணி ஏற்படப்போவதாக தகவல்கள் பரவின. ஆனால், இக்கருத்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மறுத்தனர்.இரண்டாவது நாளாக நேற்றும், காலையில் இருந்து அ.தி.மு.க., கூட்டணியில் பரபரப்பு தொடர்ந்தது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்காத நிலையில், தன்னிச்சையாக அ.தி.மு.க., 160 தொகுதிகளை அறிவித்துவிட்ட நிலையில், அக்கட்சி கொடுக்கும் தொகுதிகளை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்த நிலையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.


அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்களான ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க., தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை, ஜெயலலிதாவிற்கு தெரிவித்ததும், அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர், பிற்பகலில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையில், தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகிய அனைவரும், அடுத்தடுத்து ஜெயலலிதாவை சந்தித்தனர்.


கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஜெயலலிதா சமாதானப்படுத்தியதை அடுத்து, அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்களாக நடந்துவந்த பரபரப்பும் முடிவுக்கு வந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஜெ.,வை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அ.தி.மு.க.,வில் யாரோ சிலர் ஏற்படுத்திய குழப்பத்தை, ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு சரிசெய்ததால்அ.தி.மு.க.,வினர் உற்சாகமடைந்துள்ளனர். அ.தி.மு.க., இறுதியாக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என தெரிகிறது.


கூட்டணி கட்சிகளுக்கு விரும்பிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார் ஜெ., : அ.தி.மு.க., கூட்டணியில், கூட்டணிக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளை ஜெயலலிதா நேற்று ஒதுக்கீடு செய்தார்.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நேற்று மாலை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதையடுத்து, அவர்கள் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. குடியரசு கட்சிக்கு கே.வி.குப்பம், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, நாங்குனேரி ஆகிய தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கொங்கு இளைஞர் பேரவை கட்சிக்கு பரமத்தி வேலூர் தொகுதியும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சம்பந்தபட்ட கட்சிகளின் தலைவர்கள், தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு : அ.தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:


1. பென்னாகரம்
2. திருத்துறைப்பூண்டி (தனி)
3. புதுக்கோட்டை
4. வால்பாறை (தனி)
5.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
6. சிவகங்கை
7. தளி
8. குடியாத்தம் (தனி)
9. பவானிசாகர் (தனி)
10. குன்னூர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மாகம்யூக்கு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு:சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ., வீட்டில் நடந்த 11 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மா.கம்யூ., போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன.அதன்படி திண்டுக்கல் , அரூர் ,சிதம்பரம் கீழவேளூர் (தனி),பெரம்பூர் (தனி), விக்கிரவாண்டி ,விளவங்கோடு, மதுரை தெற்கு, பெரியகுளம், திருப்பூர் தெற்கு, மதுரவயல், பாளையங்கோட்டை ஆகியன என முடிவு செய்யப்பட்டிருப்பதாக மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்ர் தெரிவித்தார்.


கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை(தனி) தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், இ.கம்யூ.,கட்சிகளுக்கான தொகுதிகளும் முடிவு செய்யப்பட்ட நிலையில் தே.மு.தி.க.,சார்பில் இன்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.


அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் சமரசம்: மணிக்கு மணி நிலவரம் : காலை 11 மணிக்கு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினர் சென்ற பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.
*மதியம் 1 மணி: போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இல்லத்திற்கு, தொகுதி பங்கீட்டு குழுவினர் வந்தனர்.
*மதியம் 2 மணி: தே.மு.தி.க., தொகுதி பங்கீடு குழுவினர், ஓட்டலுக்கு வந்தனர். அவர்களிடம், நீண்ட நேரம் அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர், தொகுதி அடையாளம் காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
*மதியம் 2.40 மணி: ஜெயலலிதா இல்லத்தில் இருந்து அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பாலகங்கா ஆகிய நான்கு பேர் தங்களது காரில் புறப்பட்டு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
*மாலை 3.05 மணி: அ.தி.மு.க., தலைமை அலுவகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகிய இருவரும் வந்தனர்.
*மாலை 3.30 மணி: அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்தனர்.
*மாலை 3.35 மணி: நிருபர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மகேந்திரன் பேட்டி அளித்தார்.
*மாலை 3.40 மணி: ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு சென்றனர்.
*5.30 மணி: அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன், பொதுச் செயலர் இசக்கிமுத்து ஆகியோர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்தனர்.
*மாலை 5.35 மணி: இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 5.40 மணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்தனர்.
*மாலை 6.30 மணி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.40 மணி: மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.43 மணி: கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.55 மணி: சரத்குமார் வெளியே வந்தார்.
*மாலை 6.57 மணி: தனியரசு வெளியே வந்தார்.
*மாலை 7 மணி: சேதுராமன் வெளியே வந்தார்.
*மாலை 7 மணி: தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலர் சுதீஷ் ஆகியோர், ஜெயலலிதா வீட்டிற்கு உள்ளே சென்றனர்.
* மாலை 7:50 மணி: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன், ஜெயலலிதா வீட்டிற்கு சென்றார்.



பிடித்தால் ஓட்டு போடவும்

Friday, March 18, 2011

ஜெ.,வின் தடாலடி முடிவுகளுக்கு காரணம் என்ன?


ஒருவர் பாக்கியில்லாமல், அத்தனை பேருடைய எதிர்பார்ப்பையும் தகர்த்தெறிந்து ஒரு முடிவு எடுக்க முடியுமென்றால், அது .தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதாவால் தான் சாத்தியம்.


"நெடுநாள் பங்காளியான ம.தி.மு.க.,வுக்கு, கூட்டணியிலேயே இடம் வழங்கப்படவில்லை; தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள், புதிய தமிழகம் என இதர கூட்டணிக் கட்சிகள் கேட்ட இடங்களில் எல்லாம், தனது வேட்பாளர்களை அ.தி.மு.க., களமிறக்கி உள்ளது. இதுதான், வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்த கதை' என்பதாக, பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.


உண்மை அது தானா? நடுநிலையாக சிந்திக்கக் கூடிய, வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அ.தி.மு.க., பிரமுகர் கூறியதாவது: வலுவான கூட்டணி இருந்தால் வெற்றி சுலபமாகும் என்பதோ, தொகுதிகளைப் பறித்துக்கொண்டால், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடையும் என்பதோ ஜெயலலிதா அறியாதது அல்ல. தெளிவான திட்டம் இல்லாமல் அவர் எதையும் செய்யக்கூடியவர் அல்ல. அ.தி.மு.க.,வின் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விசுவாசியாக, வைகோ திகழ்ந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ம.தி.மு.க.,வுக்கு எங்கள் தலைமை கொடுப்பதாக அறிவித்த ஒன்பது தொகுதிகள் கூட, அவரது விசுவாசத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான். கடந்த ஆறு ஆண்டுகளில் ம.தி.மு.க., தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006 தேர்தலில் வழங்கப்பட்ட 35 தொகுதிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிவிட்டனர். தவிரவும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர்.


இதேபோன்ற நிலைமை அ.தி.மு.க.,விலும் இருப்பதாகக் குற்றம்சாட்ட முடியும். ஆனால், எங்களிடமிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்தரப்பில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. முத்துச்சாமி போன்ற பழைய ஜாம்பவான்கள் விலகிய பிறகு தான், கோவையில் பிரமாண்ட கூட்டத்தைத் திரட்டிக் காட்டினோம். தொடர்ந்து நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டங்களில் இருந்து, அ.தி.மு.க., இன்னமும் கட்டுக் குலையாமல் இருப்பதை உணர முடியும். கடைசியாக நடந்த பேச்சில், வைகோ 21 தொகுதிகள் கேட்டார். அவற்றையும் அவரே தேர்ந்தெடுப்பேன் என்றார். அவர் நல்ல மனிதர் என்பதும், நல்ல நண்பர் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும், எங்களை பலியாக்கி அவரது கட்சியை வாழ வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தங்களுக்கு 234 தொகுதிகளில் எதைக் கொடுத்தாலும் போட்டியிட முடியும் எனக் கூறியிருந்தார். அதுவே உண்மையெனில், முக்கியமான தொகுதிகள் போய்விட்டது என கவலைப்படுவது எதற்காக? இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பொறுத்தவரை, அவை 2006ம் ஆண்டு தேர்தலில் எதிரணியில் இருந்தவை. அவர்கள் வென்ற தொகுதி எல்லாம், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பறிக்கப்பட்டவையே. கட்சித் தலைவர் என்ற முறையில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.


தென்மாவட்டங்களில் அதிகமாக தேவர் சமுதாய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் எழுந்தது. கூட்டணியில் இருந்து கார்த்திக் கட்சி வெளியேறியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. இவை எல்லாம் தாண்டி, குட்டிக் கட்சிகளை வளர்த்துவிடும் பணியில் ஒரு பெரிய கட்சி ஈடுபட வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல. குட்டிக் கட்சிகளிடம் உள்ள 9,000 ஓட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது உண்மை தான். ஆனால், 50 ஆயிரம் ஓட்டு உள்ள நாங்கள் அவர்களிடம் ஏன் செல்ல வேண்டும். கட்சியிலேயே சில முக்கிய புள்ளிகளுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. சில பேருக்கு, அவர்களது சொந்தத் தொகுதி மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. "வலுவான தொகுதியில் சாதாரண வேட்பாளர் கூட வெற்றி பெற்றுவிடுவார். வலுவான வேட்பாளர், சாதாரண தொகுதியில் கூட வெற்றி பெற்றுவிடுவார்' என்ற கணக்கு தான். அதுவும் தவிர, இந்தத் தேர்தலோடு முடிந்துபோவதில்லை அரசியல். அடுத்தடுத்து, உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல்கள் வரவுள்ளன. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து தான் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா. இவ்வாறு அந்த அ.தி.மு.க., பிரமுகர் கூறினார்.

நன்றி


தினமலர்

Thursday, March 17, 2011

மூன்றாவது அணி குறித்த முடிவு நாளைவரை ஒத்திவைப்பு



சென்னை: தமிழகத்தில் 3வது அணியை உருவாக்குவது குறித்த முடிவு நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நிருபர்களிடம் கூறுகையில் ஆலோசனை முடிவுகளை உடனே வெளியிட முடியாது; நாளை இது தொடர்பாக முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
தமிழக தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த தேர்தலில் இருமுனை போட்டி என்ற நிலை தற்போது மாறி முமுனை போட்டி நடைமுறைக்கு வந்து விடும் என்ற நிலைக்கு அரசியல் காட்சிகள் மாறி வருகின்றன.

தி.மு.க., கூட்டணி நிலை: கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தி.மு.க., காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என தி.மு.,க ., உயர்நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு வழியாக சமரசம் ஏற்பட்டு கூட்டணி இறுதியானது. தற்போது தி.மு.க,. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தை, இந்திய யூனியன் முஸ்லிம்லீக்,. கொங்கு நாடு முன்னேற்ற கழகம், முவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு உரிய தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

நீண்ட கால நண்பர் ம.தி.மு.க.,வை கைவிட்டது : அ.தி.மு.க, அணியில் நீண்ட கால நண்பராக இருந்து வரும் ம.தி.மு.க.,.வுக்கு தொகுதி ஒதுக்குவதில் அ.தி.மு.க., அக்கறை காட்டவில்லை. இது வரை கவுரவ பேச்சுக்கு கூட அ.தி.மு.க, அழைக்கவில்‌லை. இது பெற்ற குழந்தையை விஷம் வைத்து ‌கொல்வதற்கு சமம் என இக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். புதிதாக சேர்ந்த தே.மு.தி.க., வுக்கு 41 தொகுதிகள் ஓதுக்கப்பட்டன.


தேசிய கட்சிகளான இடதுசாரிகள் அ.தி.மு.க., பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைக்கும் என காத்திருந்தன. நீண்ட இழுபறிக்கு பின்னர் மார்க்., கம்யூ., கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூ., கட்சிக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இது மிக குறைவுதான் என்று அதிருப்தியில் இருந்தாலும் அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம் என அறிவித்தன. 45 நாட்களாக பேச்சு வார்த்தைக்கு அ.தி.மு.க., அழைக்கும் என எதிர்பாத்து பொறுமையாக இருந்த நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தொகுதியை தன்னி‌ச்சையாக அறிவிப்பதா ? இதற்கிடையில் நேற்று அ.தி.மு.,க தனது 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இது கூட்டணி கட்சிகள் இடையே இப்போது பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் தே.மு.தி.க., இடதுசாரிகள், பார்வர்டுபிளாக் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்ட தொகுதிகள் அடங்கும். கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்தது அதிர்ச்சி தருவதாக மார்க்., கம்யூ., வெளிப்படையாக அறிவித்தது. சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்பதியில் இருக்கின்றன. இது தொடர்பாக அடுத்து என்ன செய்வது என இடதுசாரிகள் இன்று காலை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. தே.மு.தி.க., வும், இன்று கட்சி உயர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.இந்த கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய தா. பாண்டியன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க,வுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.


விஜயகாந்துடன் தலைவர்கள் சந்திப்பு: இன்று காலையில் மார்க்., கம்யூ., இந்திய கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கிற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அ.தி.மு.,க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்., கம்யூ., ‌ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணச்சாமி , மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், பார்வர்டுபிளாக் கட்சி தலைவர் கதிரவன் ஆகியோர் கூடி பேசினர். பின்னர் அனைத்து நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


ஜெ., உருவ பொம்மை எரிப்பு : தே.மு.தி.க., தொண்டர்கள் ஆவேசம்: சென்னையில் தே.மு.தி.க., தொண்டர்கள் ஜெ., உருவ பொம்மையை எரித்தனர். அடுத்து என்ன செய்துவது என தே.மு.தி.க., கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு கூடிய இக்கட்சி தொண்டர்கள் ஜெ.,க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஜெ., உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.


ஒரணியில் அணிதிரள வாய்ப்பு : அ.தி.மு.க, கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தே.மு.தி.க., ம.தி.மு.க.,.இடதுசாரிகள் மற்றும் அதிருப்தியில் உள்ள இதர கட்சிகள் ஒரணியில் திரண்டு 3 வது அணியை அமைக்க யோசிப்பதாக தெரிகிறது. இப்படி முடிவு எடுக்கும் பட்சத்தில் தமிழக தேர்தலில் மும்முனை போட்டி உருவாகும். அ.தி.மு.க., தனித்து விடப்படும்.

Wednesday, March 16, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா; பெரிய கட்சிகளே கூட்டணிக்கு இழுக்கும் அவலம்

"ஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் அமைப்போம்' என்பது தான் எல்லா அரசியல் கட்சிகளின் லட்சியமாக சொல்கின்றனர். ஆனால், ஜாதி பின்னணி இல்லை என்றால், அரசியலே செய்ய முடியாது என்பது தான் உண்மையாக இருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் கூட, ஜாதி கட்சிகளை வளர்த்து விடுவது, நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் சமயங்களில் மட்டும் ஜாதிக் கட்சிகளுக்கு, திடீர் ஜாதிப் பற்று ஏற்பட்டு, ஏதாவது ஒரு கூட்டணியில் அதன் தலைவர்கள் மட்டுமாவது, "சீட்' பெற்றுக் கொள்வது வழக்கமாகி வருகிறது.ஆரம்பத்தில், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர், முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் போன்றவர்கள் ஜாதிப் பின்னணியில் கட்சி நடத்தினர். ஆனால், இவர்கள் மாறி, மாறி கூட்டணி அமைத்தது மற்றும் பிரதான கட்சிகளில் இணைந்தது போன்ற காரணங்களால், இவர்களது கட்சிகள் காணாமல் போய்விட்டன.அதன் பின், நீண்ட காலமாக, பிரதான கட்சிகளில் தான், ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது, ஜாதி பலத்துக்கு ஏற்ப அமைச்சர்களை நியமிப்பது போன்றவை நடந்து வந்தது. 1996ல் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் அலையிலும், பா.ம.க., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற பின், அக்கட்சியின் பக்கம், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய பெரிய கட்சிகளின் பார்வை திரும்பியது.

அப்போது முதல், பா.ம.க., தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியில் அதிக எண்ணிக்கையில், "சீட்'களைப் பெற்று, தன்னை வளர்த்துக் கொண்டது. இதை பார்த்து மற்ற ஜாதி அமைப்புகளுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.கடந்த, 2001 சட்டசபை தேர்தலின் போது, அதிகளவில் ஜாதிக் கட்சிகளுக்கு, "சீட்' ஒதுக்கி, 18 கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி அமைத்து தோல்வியடைந்தது. அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற பா.ம.க.,வும், தி.மு.க., அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடமும் தவிர, மற்ற ஜாதிக் கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.இதன் பின், 2006 தேர்தலில் ஜாதிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அ.தி.மு.க., அணியில் விடுதலைச் சிறுத்தைகளும், தி.மு.க., அணியில் பா.ம.க.,வும் இடம்பெற்றன. மற்ற ஜாதிக் கட்சிகள் எல்லாம், வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.

ஆனால், இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டுமென தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதை சாதகமாக பயன்
படுத்திக் கொண்ட ஜாதிக் கட்சிகள், இரு அணிகளிலும் போட்டி போட்டு, "சீட்' பெற்றுள்ளன.தி.மு.க., அணியில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமன்றி, கவுண்டர்களின், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், முக்குலத்தோரின், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், நாடார் இன மக்களின், பெருந்தலைவர் மக்கள் கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க., அணியில் புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற ஜாதிக் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

இது தவிர, மீதமுள்ள ஜாதிக் கட்சிகள் இணைந்து புதிய அணியை உருவாக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளன. இப்படியே போனால், இந்தத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொண்டு திருப்திபட்டுள்ள ஜாதிக் கட்சிகள், அடுத்த தேர்தலுக்குள் பலத்தை அதிகப்படுத்தி, கூடுதல் தொகுதிகள் கேட்கத் துவங்கிவிடும்.வரும் தேர்தல்களில், ஒவ்வொரு
ஜாதிக்கும் இத்தனை தொகுதிகள் என்ற அடிப்படையில், அறிவிக்கப்படாத இடஒதுக்கீடே வந்தாலும் வியப்பதற்கில்லை.இதனால், பிரதான அரசியல் கட்சிகளில் ஜாதி அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைவர்கள் தங்களுக்கு ஜாதிப் பின்னணி இல்லாவிட்டால், கட்சியில் காலந்தள்ள முடியாமல் போய்விடும் என்ற கவலையில் உள்ளனர்.

ஜாதியை முன்னிறுத்தும் கட்சிகள்

பாட்டாளி மக்கள் கட்சி: ராமதாஸ்
புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருமாவளவன்
புதிய நீதிக்கட்சி: ஏ.சி.சண்முகம்
சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார்
நாடாளும் மக்கள் கட்சி: கார்த்திக்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்: ஸ்ரீதர் வாண்டையார்
மூவேந்தர் முன்னேற்ற முன்னணி: சேதுராமன்
கொங்குநாடு முன்னேற்றக் கழகம்: "பெஸ்ட்' ராமசாமி
சமூக சமத்துவப் படை: சிவகாமி
தலித் முன்னணி: குமரி அருண்
இந்திய ஜனநாயக கட்சி: பச்சமுத்து
யாதவ மகா சபை: தேவநாதன்
புரட்சி பாரதம்: ஜெகன் மூர்த்தி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: ஜான் பாண்டியன்

Tuesday, March 15, 2011

தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் தயார்: நீண்ட பேரத்திற்குப்பின்னர் தொகுதி பங்கீடு முடிவு

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், .தி.மு.., - தி.மு.., அணிகள், பலப்பரீட்சையில் ஈடுபட தயாராகி விட்டன. இன்றைய நிலவரப்படி, .தி.மு.., 160 தொகுதிகளிலும், தி.மு.., 120 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

தமிழக சட்டசபை பொது தேர்தலுக்கான மனு தாக்கல், வரும் சனிக்கிழமை துவங்குகிறது. மனு தாக்கலுக்கு நான்கு நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தொகுதிகளை அடையாளம் காணுதல், வேட்பாளர்களை முடிவு செய்தல், பிரசார திட்டத்தை வகுத்தல் ஆகிய பணிகளில் சுறுசுறுப்படைந்துள்ளன.தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதால், நீண்ட பேரத்திற்குப் பின் அந்தக் கூட்டணிக்கு இறுதி வடிவம் கிடைத்துள்ளது. தி.மு.க., 120 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட, 12 தொகுதிகளில் குறைவாக தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ம.தி.மு.க.,வுக்கு மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை.

அந்தக் கட்சிக்கு மிக சொற்ப எண்ணிக்கையில், வெறும் எட்டு தொகுதி ஒதுக்க, அ.தி.மு.க., முன்வருவதால், கூட்டணியில் அக்கட்சி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தவிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியும் இறுதி வடிவம் பெற்று விட்டது. அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.அ.தி.மு.க., கடந்த முறை, 188 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்கு ஒரு வேளை அ.தி.மு.க., கூடுதல் தொகுதிகள் கொடுக்க முன் வந்தால், தன் பங்கில் இருந்துதான் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது, அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்.இந்த முறை இருமுனைப் போட்டி என்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கும் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, March 14, 2011

சென்னையில் போட்டியிட அஞ்சும் தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள்

"சென்னையில் பெரும்பாலான தொகுதிகள் தி.மு.க., வுக்கு சாதகமாக இல்லை' என, உளவுப் பிரிவு மூலம் தெரிந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிடுவதைத் தவிர்த்து, தங்களுக்கு சாதகமான தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிடும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.


தி.மு.க., தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டு, தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிட ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கின்றன.


அதே போன்று, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன், காங்., கைவசம் வைத்துள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியைத் தேர்வு செய்துள்ளாராம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் அங்கு சேர்மனாக இருப்பதால், அவரது ஆதரவோடு அந்தத் தொகுதியில் எளிமையாக ஜெயித்து விடலாம் என, பன்னீர்செல்வம் ஆலோசனை கூறி யுள்ளார்.

துணை முதல்வர் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, பாளையங்கோட்டை தொகுதி பக்கம் போய்விடலாம் என திட்டமிட்டுள்ளார்.

ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர்குதியில் இருந்து செங்கல்பட்டு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளார்.

இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது.

Sunday, March 13, 2011

தேர்தலில் ஓட்டுச்சீட்டை புகுத்த அ.தி.மு.க., ரகசிய திட்டம்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில், 60க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, கட்சி மேலிடம் ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டசபை தேர்தலில் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடக்காது, ஓட்டுச் சீட்டு முறை வரும் என்பது அ.தி.மு.க.,வின் கணக்கு. "இது, அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்' என கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., நலம் விரும்பிகள், கட்சி மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லியுள்ளனர்.


சட்டசபை தேர்தலுக்காக 19ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும், 54 ஆயிரத்து 16 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தல்களை போல வரும் சட்டசபை தேர்தலிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமே ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது."மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது' என, கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டின.


வரும் சட்டசபை தேர்தலிலும் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடப்பதாலும், தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுகள் எண்ணப்படும் என்பதாலும், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. பழைய முறைப்படி சீட்டுகளில் ஓட்டுப்பதிவு செய்து பெட்டிகளில் போடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. மின்னணு இயந்திரத்தில் உள்ள, ஒரு போர்டில் அதிகபட்சம் 16 பட்டன்கள் மட்டுமே இருக்கும். அதில், 16 வேட்பாளர்கள் சின்னம் மட்டுமே பொருத்த முடியும். ஒரு இயந்திரத்தில் அதிகபட்சம் நான்கு போர்டுகள் பொருத்த முடியும்.போர்டுக்கு, 16 பேர் வீதம் அதிகபட்சம், 64 வேட்பாளர்கள் சின்னங்கள் பொருத்தலாம். ஒரு தொகுதியில் அதிகபட்சம், 64 வேட்பாளர்கள் போட்டியிட்டால் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடத்த முடியும். அதற்கும் கூடுதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டால், அந்த தொகுதியில் இயந்திரத்துக்கு பதிலாக ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.


மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தாமல் இருக்க, ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க., ஆதரவாளர்கள் 60 பேர், சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு 60 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். அதற்காக கட்சியில், ஒவ்வொரு தொகுதியிலும் நம்பிக்கையான 60 பேர் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு கட்சித் தலைமையே வேட்பு மனு தாக்கலுக்கான தொகையையும் வழங்க உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் பழைய முறைப்படி ஓட்டுச் சீட்டு தேர்தலை கொண்டு வரலாம், ஆளும் கட்சியின் முறைகேடுகளைத் தவிர்க்கலாம் என, அ.தி.மு.க., கணக்கு போடுகிறது.


யாருக்கு லாபம்? அ.தி.மு.க.,வின் இந்த ரகசிய திட்டம், அ.தி.மு.க.,வுக்கு எதிராகவே திரும்பும் என, தேர்தல் அனுபவஸ்தர்கள் சொல்கின்றனர்.
* ஒரு தொகுதியில் 70 பேர் போட்டியிட்டால், அவர்கள் பிரசாரம் செய்யாத போதிலும், சிலர் அவர்களுக்கு ஓட்டு போடுவர். ஒருவருக்கு குறைந்தது 100 ஓட்டு விழுந்தாலே, மொத்தம் 7,000 ஓட்டுகள் சுயேச்சைகளுக்கு சென்றுவிடும். பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசமே சில 100 ஓட்டுகள் தான் இருக்கும். அப்படியிருக்கும் போது 7,000 ஓட்டுகள் தேர்தல் முடிவையே மாற்றிவிடும். அந்த ஓட்டுகளும் ஆளும் கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகளாகத் தான் இருக்கும். இது அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும்.
* ஓட்டு எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள் தான் ஈடுபடுவர். அவர்கள் தி.மு.க., ஆதரவாளர்கள். அ.தி.மு.க.,வுக்கு விழுந்த ஓட்டை கூட தி.மு.க., ஓட்டு என்று அவர்கள் முடிவு செய்தால், எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
* ஆளும் கட்சிக்கு கடைசியில் சுயேச்சைகள் விலை போய்விட்டால், அப்போதும் அ.தி.மு.க.,வுக்கு சிக்கலாகி விடும்.

Saturday, March 12, 2011

தனித் தொகுதி பெண் வேட்பாளரின் செலவை கட்சியே ஏற்கும்: விஜயகாந்த் உறுதி



"தே.மு.தி.க., சார்பில், தனித் தொகுதியில் நிற்கும் பெண் வேட்பாளரின் தேர்தல் செலவை, கட்சியே ஏற்கும் ' என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்.


தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை மாவட்ட வாரியாக பிரித்து, மூன்று நாட்களில் நேர்காணல் முடிக்க திட்டமிடப்பட்டது.கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில், 79 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம், முதல் நாள் நேர்காணல், நேற்று நடந்தது.அதிகாலை முதலே, மனுதாரர்கள் தங்கள் தொண்டர் படையுடன், தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தில் கூடியிருந்தனர். அ.தி.மு.க., வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதால், நேர்காணலை சந்திக்க தொண்டர்கள் ஆர்வமுடன் காணப்பட்டனர்.கட்சித் தலைவர் விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ் உட்பட பல பொறுப்பாளர்கள், விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணலை நடத்தினர். காலையில் தொடங்கி இரவு வரை நேர்காணல் நீடித்தது.இக்குழுவினர், விருப்ப மனுதார்களிடம் நேர்காணல் நடத்திய பின், இறுதியாக கட்சித் தலைவர் விஜயகாந்த் சில கேள்விகளைக் கேட்டார்; ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். தொகுதியில், கட்சியின் செல்வாக்கு, கூட்டணி பலம், தேர்தல் செலவு, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்தே, விருப்ப மனுதாரர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


நேர்காணலில் பங்கு பெற்ற விருப்ப மனுதாரர்கள் கூறியதாவது:தொகுதியில் எத்தனை ஓட்டுகள் உள்ளன, எத்தனை "பூத்' கள் உள்ளன என்ற அடிப்படை கேள்விகளோடு தொடங்கி, வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய தயாராக இருக்கின்றனர்; தொகுதியில் வெற்றி வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டனர்.குறிப்பாக தனித் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அவர்களது தேர்தல் செலவை கட்சியே ஏற்கும் என, தலைவர் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார். மேலும், தொகுதியில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருக்காகவும், கூட்டணி வேட்பாளருக்காகவும் ஒருங்கிணைந்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என, ஆலோசனைகளையும் வழங்கினர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


இன்று 11; நாளை 12:முதல் நாளன்று 10 மாவட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்று தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருச்சி, புதுச்சேரி, சென்னை ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 77 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, சிவகங்கை, கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கான நேர்காணல் நாளை நடைபெறுகிறது.

Friday, March 11, 2011

காங்., - தி.மு.க., கபட நாடகம்: ஜெயலலிதா கடும் தாக்கு

சென்னை: "காங்கிரஸ் - தி.மு.க., நடத்தும் கபட நாடகத்தை, மக்கள் புரிந்து கொண்டால் மட்டும் போதாது; ஓட்டளிக்க வேண்டும்' என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கபட நாடகம் நடந்து முடிந்தாகி விட்டது. இறுதியாக, குட்டு வெளிப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்து விட்டது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கிடைத்த பணத்தை, தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க., - காங்கிரஸ் தங்கள் வேறுபாட்டை போக்கி, தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளன. அவ்விரு கட்சிகளுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள், ஊடகங்களுக்கும், இரு கட்சித் தொண்டர்களுக்கும் வியப்பை அளித்திருக்கலாம். தொகுதி எண்ணிக்கை தொடர்பாக, கருணாநிதி அதிருப்தி தெரிவித்தார். பின், மத்திய அரசில் இருந்து தன் கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார். ராஜினாமா கடிதங்கள் அளிக்க தி.மு.க., மத்திய அமைச்சர்கள் டில்லி சென்றனர். ராஜினாமா கடிதங்களோ அவர்களின் சட்டைப் பைகளில் இருந்து வெளிவரவில்லை. இதற்கு பதில், மீண்டும் இணைந்து செயல்படும் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஊடகங்களும், மக்களும் ஒரு வாரத்திற்கு, "ஸ்பெக்ட்ரம்' விசாரணை, விலைவாசி உள்ளிட்ட மற்ற பிரச்னைகளையும் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுதான் கருணாநிதியின் தந்திரம்.


இந்த கபட நாடகம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. மத்திய அமைச்சரவை, 2009ல் அமைக்கப்படும் போதே இது போன்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து, கட்சி எம்.பி.,க்களுடன் சென்னைக்கு திரும்பினார் கருணாநிதி. அவரது கபட நாடகம் பலனை தந்தது. வளமான இலாகாக்கள் கிடைத்தன. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் உரிய பங்கு கிடைக்காத போதும், முல்லைப் பெரியாறில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு திரும்ப திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள், நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டபோதும், வறுமையில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசில் இருந்து விலகப் போகிறோம் என கருணாநிதி மிரட்டவில்லை. வழக்கம் போல் கடிதங்களை அனுப்பினார். வேண்டிய இலாகாக்கள் கிடைக்கவில்லை, தனக்கு நெருக்கமானவர்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்படப் போகின்றனர் என்றால், வேறு காரணத்தைச் சொல்லி, மத்திய அரசை வீராப்புடன் மிரட்டுவார்.


இந்த கபட நாடகங்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இளம் தலைமுறையினர் எஸ்.எம்.எஸ்., மூலம் பரிமாறிக் கொள்ளும் செய்திகளும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் விலைமதிப்பற்ற ஓட்டினை செலுத்த முன்வர வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்றி, தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Thursday, March 10, 2011

தி.மு.க., - காங்கிரஸ் அடுத்த பலப்பரீட்சை

சென்னை: தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யும் அடுத்த கட்ட பலப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட சில தொகுதிகளை காங்கிரசும், தி.மு.க.,வும் விரும்புவதால் நெருக்கடி உருவாகியுள்ளது.

காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட காலதாமதத்தைப் போல், தொகுதிகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், தி.மு.க., கவனமாக இருக்கிறது. இதற்காக, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பரிசீலித்து அதை முடிவு செய்வதில் தி.மு.க., தீவிரமாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிகளை இம்முறையும் அக்கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, கூடுதல் தொகுதிகளுக்கு, அடுத்த முக்கியத்துவம் அளிக்க உள்ளனர். தேர்தல் கமிஷனின் தொகுதி சீரமைப்பினால், சில தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. சில புதிய தொகுதிகள் உருவாகியுள்ளன. இதனால், பாரம்பரியமாக இருந்த தொகுதிகளும், சில வி.ஐ.பி., தொகுதிகளும் விடுபட்டுள்ளன. இவற்றுக்கு மாற்றுத் தொகுதிகள் தேடுவதிலும் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் தனி கவனம் செலுத்துகின்றனர். தனித் தொகுதிகளை பிற கட்சிகளுக்கு தள்ளிவிட்டு, பொதுத் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதில் பல கட்சிகள் உஷாராக உள்ளன. ஆனால், ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் விகிதாச்சாரம் இருக்கும் என்று தெரிகிறது.


மேலும், சில கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தான் செல்வாக்கு உள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் மட்டும் அதிகத் தொகுதிகளில் போட்டியிட அக்கட்சிகள் விரும்புகின்றன. அதனால், மற்ற கட்சிகளுக்கு அந்த மாவட்டங்களில் தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தொகுதிகளை ஒதுக்குகின்றனர். கட்சி மாறி வந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதில் பிற கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், தொகுதிப் பங்கீட்டுக் குழு கவனமாக உள்ளது. வி.ஐ.பி., தொகுதிகளை பட்டியலிட்டு, அதை மற்ற கட்சியினர் கேட்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு தொகுதியைப் பெறுவதில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும்போது, குலுக்கல் முறையில் ஒரு கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளனர். பா.ம.க., - விடுதலைச் சிறுத்தை - கொ.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்யும் பணி முடியும் தருவாயில் உள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தி.மு.க., கூட்டணியில் கட்சி வாரியாக போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க., - 121, காங்., - 63, பா.ம.க., - 30, வி.சி., -10, கொ.மு.க., - 7, முஸ்லிம் லீக் - 2, மூ.மு.க., - 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

Wednesday, March 9, 2011

இலவச கிரைண்டரா? மிக்ஸியா? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்

கடந்த சட்டசபை தேர்தலை போல், இம்முறையும் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒரு பொருள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிச்சயம் இடம்பெறும் என பெண் வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


கடந்த சட்டசபை தேர்தலில் அனைவருக்கும் இலவச கலர் "டிவி' என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி வாக்காளர்களை வசியம் செய்தது; தி.மு.க., கூட்டணிக்கு வெற்றியையும் தந்தது. இம்முறையும் பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம், ஒவ்வொரு கூட்டணியும் என்ன இலவசமாக வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மிஷன் என ஏதோ ஒரு பொருள் இலவசமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில், பெண்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, வயல்வெளி, ஆடு, மாடு மேய்க்கும் இடங்களில் இலவச பொருட்கள் குறித்து பரபரப்பாக பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்

Tuesday, March 8, 2011

கேள்வி கேட்ட கருணாநிதி பணிந்தார்: காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு


"காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடகமும் முடிவுக்கு வந்தது.


"தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரதமரை சந்திக்கச் செல்வர் என்றும் கூறப்பட்டது. அதற்காக பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டிருப்பதாகவும், காலை 11 மணியளவில் பிரதமர் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. பார்லிமென்ட் நடந்து கொண்டிருப்பதால் அங்கு, பிரதமர் அலுவலகம் எதிரே நிருபர்கள் குவிந்தனர். திடீரென நிலைமை மாறியது.


மத்திய ஊழல் ஆணையத்தின் தலைவராக தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்வதில் பிரதமர் வட்டாரங்கள் பிசியாக இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போகவே, மறுபடியும் பரபரப்பும், சஸ்பென்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மதியம் 12 மணியளவில் பார்லிமென்டில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மட்டும் வந்து சந்தித்து விட்டு போனார். அவர் சென்ற சில நிமிடங்களில், பிரணாப் முகர்ஜியின் அறைக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார். அங்கு, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோரும் உடன் இருக்க மீண்டும் ஆலோசனை தொடர்ந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த சிதம்பரம், எதுவுமே கூறாமல் சென்றார். குலாம் நபி ஆசாத்தோ, "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை; முட்டுக்கட்டை நீடிக்கிறது' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.


இப்படி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எதுவுமே எந்தவொரு அறிகுறியையும் காட்டாமலேயே நடந்து கொண்டிருந்ததால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க கூட முடியாத அளவுக்கு மிகுந்த பரபரப்பும், சஸ்பென்சும் நீடித்தபடி இருந்தது. பின்னர் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் இதை உறுதிப்படுத்திய துணை முதல்வர் ஸ்டாலின், "மேலும் ஒரு நாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.


துணை முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேற்று நாள் பூராவும் அழகிரி வீட்டில் ராஜினாமா கடிதங்களோடு காத்திருந்த தி.மு.க., அமைச்சர்கள், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியை கைவிட்டனர். காங்கிரசுக்கு தி.மு.க., 60 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டது. பா.ம.க., தரப்பில் இருந்து 3 தொகுதிகள் வரை விட்டுக் கொடுத்து மொத்தம் 63 தொகுதிகளாக அளித்து சுமுகமான ஒரு முடிவை எடுத்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு பிரச்னைக்கு இன்று இறுதி முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இடங்கள் அறிவிக்கப்பட்ட வேறு கட்சிகளிடம் இருந்து, ஒரு சில இடங்களைக் குறைப்பது குறித்து தி.மு.க.,ஆலோசனை நடத்தி வருகிறது.


முதல்வர் கேட்ட கேள்வி: கடந்த 5ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: காங்கிரசுக்கு 60 இடங்கள் கொடுக்க தி.மு.க., ஒப்புக் கொண்ட நேரத்திலே, பா.ம.க.,விற்கு 31 இடங்கள், வி.சி.,க்கு 10 இடங்கள், கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் என, தி.மு.க.,விற்கு 122 இடங்கள் தான் எஞ்சியிருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.


இதுவரை ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: தற்போதைய நிலையில், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 52 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கிவிட்டது. மீதமுள்ள 182 தொகுதிகளில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கினாலும், தி.மு.க., வசம் மீதமிருப்பது 122 தொகுதிகள் தான். எனவே, 63 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தால், தனிப்பெரும்பான்மை பெற 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில், தி.மு.க.,வால் 119 தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சிலவற்றை திரும்பப் பெற்று, காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க., முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.


பா.ம.க., .................................................... 31
விடுதலை சிறுத்தைகள் ................................. 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ................. 7
முஸ்லிம் லீக் ............................................... 3
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ..................... ௧

நன்றி


தினமலர்