Friday, February 11, 2011
விஜய்யின் அரசியல் பயணம் நாகப்பட்டினத்தில் இருந்து ஆரம்பம். பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்கிறார்.
நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதிக்கிறார். தேர்தலுக்கு முன் திருச்சியில் ரசிகர்கள் மாநாடு நடத்தி இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். அதன் பிறகு பிரசாரத்திலும் குதிக்கிறார்.
தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், அரசியல் பணிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.அவர்கள் விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன் நாகப்பட்டினம் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து மீனவர்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கப்பட்டன.
இது போல் விஜய்யும் அங்கு சென்று மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விஜய்யுடன் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்வார் என தெரிகிறது.
இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினம் கடலோர பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற 22-ந்தேதி விஜய் அப்பகுதிகளுக்கு செல்வார் என கூறப்படுகிறது. அப்போது விஜய் ரசிகர்கள் 1 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம் வருவார்கள் என்று திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ராஜா கூறினார்.
Labels:
விஜய்யின் அரசியல் பயணம்