Monday, April 23, 2012

மீண்டும் ஜனாதிபதியாகிறார் அப்துல் கலாம் ! அ.தி.மு.க.,- முலாயம்-மம்தா கட்சி சம்மதம்


புதுடில்லி: இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்தவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமை மீண்டும் பதவியில் அமரச்செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி கட்சி (முலாயம்சிங்) , திரிணாமுல்காங்., ( மம்தா) ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.

வரும் ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து நடக்கவிருக்கும் தேர்தலில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கலாம் என காங்., வட்டாரத்தில் பரபரப்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி, அமீது அன்சாரி ஆகியோரது பெயர்கள் பரிசீலைனையில் உள்ளது. 

இதற்கிடையில் விஞ்ஞானி அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக்கிட அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல் காங்., விரும்புகிறது. இவரை நிறுத்தினால் ஓட்டுப்போட தயாராக இருப்பதாகவும், ஒத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ., காலத்தில் கலாம் ஜனாதிபதியாக இருந்து நற்பெயர் பெற்றவர் என்பதாலும், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், அரசியலுக்கு அப்பாற்றபட்டவர் என்பதாலும் இவருக்கு மே<லும் ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தகவலை மகாராஷ்ட்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய எரிசக்தி துறை அமைச்சருமான சுஷீல்குமார் ஷிண்டேவும் இதனை <உறுதி செய்துள்ளார். கலாம் ஜனாதிபதியாக்கிட மேற்கூறிய கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை நிலவியிருப்பதாக கூறியிருக்கிறார். ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.