Saturday, January 8, 2011

மல்லுகட்டிய ஆதரவாளர்கள்... மன்னிப்பு கேட்ட அதிகாரி...

Swine Flu

ஏடியெம்கே வட்டாரத்துல எதுக்காக இந்த அவசரம்னு தெரியல... எல்லா இடத்துலயும் இப்பவே பேனர் வைக்க ஆரம்பிச்சுட்டா பாத்தேளா...’’ என்று கேட்டாள் சுசிலா மாமி.
“இன்னும் ஒரு மாசத்துல பாரு... எல்லா கட்சிகளும் வரிஞ்சு கட்டிட்டு இறங்கிடும்... இன்னொரு விஷயம் தெரியுமா... ஏடியெம்கேல போட்டியிட விரும்பறவங்கட்ட விருப்ப மனு வாங்குவாங்க... பத்தாயிரம், பதினைஞ்சாயிரம்னு பணம் கட்ட சொல்லுவாங்க... அதுக்கான தேதிய பிக்ஸ் பண்ணிட்டு கடைசி நேரத்துல கேன்சல் பண்ணிட்டாங்களாம்...’’ என்று சொன்னார் பீட்டர் மாமா.

‘‘பிப்ரவரி ஒண்ணாம் தேதினு சொன்னா... காரணமில்லாமலா தள்ளிவைப்பா...’’ என்றாள் சுசி மாமி.
“9ம் தேதி கன்னியாகுமரியில நடக்கற நிகழ்ச்சிதான் காரணமாம்... அதுக்காக 8ம் தேதி ஜெயலலிதா கட்சி ஆபீசுக்கு வர்றதா இருந்த புரோகிராமும் கேன்சல்... நிறைய பேர் கட்சில இணையற ஏற்பாடெல்லாம் நடந்துச்சாம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அதுக்குப் பதிலா 17ம் தேதி கட்சி ஆபீசுக்கு ஜெயலலிதா வர்றாங்களாம்... தொடர்ச்சியா 19ம் தேதியும் ஏதோ நிகழ்ச்சி வெச்சிருக்காளாம்...’’ என்று சுசி மாமி சொன்னாள்.
‘‘தேசிய கட்சிக்காரங்க கூட்டம் நடத்த இடம் தேடி அலையறாங்களாமே... என்ன பிரச்னையாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

“திருவொற்றியூர்ல நவம்பர் 19ல் தொடங்கின பீஜேபி யாத்திரை 29ம் தேதி சென்னையில முடியறதாம்... முடியற இடத்துல பொதுக்கூட்டம் நடத்தறா... டெல்லி லீடர்ஸ், கூட்டணி கட்சிக்காராள எல்லாம் கூப்பிட்டிருக்காளாம்... கூட்டம் நடத்தறதுக்குதான் பெரிய மைதானம் கிடைக்கலையாம்... எழும்பூர்  ஸ்டேடியம் பக்கத்துல ஆர்ப்பாட்டம் நடத்தறதா பெர்மிஷன் வாங்கிட்டாளாம்... ஆனா, கூட்டம் அதிகம் இருக்கும்னு எதிர்பாக்கறா... அதனால வேற இடம் தேடறாளாம்... கட்டுக்கடங்காத கூட்டம்னு சொல்ற அளவுக்கு தொண்டர்கள கூட்டிட்டு வரணும்னு மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவாம்...’’ என்று விளக்கம் சொன்னாள் சுசி மாமி.

‘‘ஏடியெம்கேல ரிடையர்டு போலீஸ் ஆபீசர் ஒருத்தர் சேர்ந்திருக்காரே... செய்தி படிச்சியா...’’ என்று கேட்டு பேச்சை மாற்றினார் பீட்டர் மாமா.
“ஏடியெம்கே பீரியடுல டிஜிபியா இருந்தவராச்சே... அப்பவே ஆட்சியில இருந்தவாளோட திடீர்னு கருத்து வேறுபாடு வந்ததா சொன்னா... தமிழ்நாட்டுல இருக்க விரும்பாம மத்திய பணிக்கு போயிட்டார்னு தகவல்...’’ என்று சுசி மாமி சொன்னாள்.

‘‘உண்மைதான்... கருப்புபூனை படை தலைவரா சேர்ந்தார்... பணிச் சுமை காரணமா மறுபடியும் தமிழகப் பணிக்கு வந்துட்டார்... ரிடையர் ஆனதும் சும்மா இருக்க முடியல... எம்பியாகலாம்னு கணக்கு போட்டு ஏடியெம்கேல சேர்ந்துட்டதா அவரோட பழைய போலீஸ் ப்ரண்ட்ஸ் சொல்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சேலத்துல ஒரு எம்மெல்லேக்கு அதிகாரிகள் கொடுத்த டாக்டர் பட்டம் பத்தி தான் பரபரப்பா பேசிண்டிருக்காளாமே...’’ என்று அடுத்த விஷயத்தை ஆரம்பித்தாள் சுசி மாமி.
“அந்த விஷயமா... ஆத்தூர்ல ஆர்டிஓ ஆபீஸ் பில்டிங் ஓப்பனிங் பங்ஷன்... ரெண்டு மினிஸ்டர்ஸ் கலந்துட்டாங்க... விழா அழைப்பிதழ்ல தொகுதி எம்பி பெயரை விட்டுட்டாங்க... அழைப்பிதழ்ல ஏடியெம்கே எம்மெல்லேக்கு டாக்டர் பட்டம் கொடுத்துட்டாங்க...

அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு விஷயம்... இன்னொரு எம்மெல்லே டாக்டராம்... அவங்களுக்கு போட வேண்டிய பட்டத்தை இவருக்கு போட்டுட்டாங்களாம்...கடுப்பான அவரோட ஆதரவாளர் அதிகாரிகள்ட்ட மல்லுக்கு போயிட்டாங்க... எம்பியோட ஊருக்கே போய் மன்னிப்பு கேட்டுட்டு வந்துருக்கார் அந்த அதிகாரி... அதோட நின்னா பரவாயில்ல... புதுசா ஒரு அழைப்பிதழ் அடிச்சு கொடுத்துருக்கா...’’ என்று முழு பின்னணியையும் பீட்டர் மாமா சொல்லி முடித்ததும், வீட்டு வேலைகளை கவனிக்க சென்றாள் சுசி மாமி.                   

0 comments:

Post a Comment