Saturday, January 8, 2011

உடைந்த கடவுள்

அன்றெல்லாம்
சுடுகாட்டில் இருக்கும்
வெட்டியான்களை எல்லாம்
விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை
பேய் தின்று விடுமோ என்றே  
பயம் வரும்
இன்றும் அதே பயம்
வீடு சுற்றி
நாடு சுற்றி
மனசாட்சியை கொன்றுகொண்ட
பேய்களே உலவுகிறது;
சுடுகாடே -
மேல்போல்!!
வாழ்க்கை
வெங்காயம் போல்
என்றார் யாரோ;
உரிக்க உரிக்க
கண்ணீ­ராம்.
உரிபடுவதேயில்லை
இப்போதெல்லாம்
நிறைய பேரின் வாழ்க்கை;
வெங்காயம் என்று
வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில்
கண்ணீ­ர் மட்டும் மிட்சம் போல்.
என்னை கேட்டால்
வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள்
வாழுங்கள் என்பேன்!!
நிறைய வீடுகளில்
நிறைய அறைகள்
புழக்கமின்றியே கிடக்கிறது;
வீடற்று இருப்பவர்களை பற்றி
அந்த அறைகளுக்கு
எந்த கவலைகளும் இல்லை,
தெருவில் உண்டு
உறங்கி
புணர்ந்து 
தலைமுறைகளை கடக்கும்
ஒரு சாமானியனின் தேவை
நான்கு சுவர் மட்டுமே என
அந்த -
வெற்றுக் கட்டிடமான
கல் மண் கலவைகளுக்குப் 
புரிவதேயில்லை!
எனக்குத் தெரிந்து
கல் சுமக்கும்
பீடி சுற்றும்
உணவகத்தில் மேசை துடைக்கும்
பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும்
தேநீர்கொண்டு வந்து கொடுக்கும்
சிறுவர்களின் வியர்வையில் தான்
நசுக்கப் படுகின்றது
நம் தேசத்தின்
முன்னேற்றத்திற்கான விதைகள்!

1 comments:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

வணக்கம் செல்வா, பிறர் கவிதைகளைப் பதிகையில் படைப்பாளியின் பெயரோடு பதியவும். இதலாம் நமது உடைந்த கடவுள் புத்தகத்திற்காக எழுதிய கவிதைகளாகும்..

http://vidhyasaagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

வித்யாசாகர்

Post a Comment