தேர்தல் களம் ரெடி யாகி கொண்டிருக்குதே
தனக்கு ஒண்ணு... தன் மகனுக்கு ஒண்ணு... மந்திரியின் அதிரடி, "பிளான்!' ""தனக்கும், மகனுக்கும் இப்பவே தொகுதியை ரெடி பண்ணிட்டாரு பா...!'' என, அரசியல் தகவலோடு விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.
""எந்த கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
""ஆளும் கட்சியில தான் பா... அமைச்சர் பொன்முடி, விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளை, போட்டியிட வசதியா தயார் பண்ணிட்டு வராரு... இதுல, விழுப்புரம் அவருக்காம்... திருக்கோவிலூர் அவரது மகனுக்காம்...
""எதுக்கும் இருக்கட்டும்ன்னு, மூணாவதா விக்கிரவாண்டி தொகுதியையும் ரெடி பண்றாராம்... கூட்டணியில தொகுதி மாறினா, போட்டியிட வசதியா இருக்குமேன்னு தான் இந்த ஏற்பாடு பா...'' என்றார் அன்வர்பாய்.
""பத்து ரூபாய் நோட்டுகளை சேகரிக்காங்க வே...'' என்றபடி, அடுத்த தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.
""விக்கற விலைவாசியில, அதை சேகரிச்சு வைச்சு என்ன பிரயோஜனமுங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.
""விஷயத்தை கேளும்... பிறந்த நாள், பொங்கலுக்கு தன்கிட்ட வந்து வாழ்த்து பெறுவோருக்கு பத்து ரூபாய் நோட்டை முதல்வர் கொடுக்கறது வழக்கம்... இப்படி வருஷா வருஷம் வாங்கும் ரூபாய் நோட்டுகளை, சில உடன்பிறப்புகள் சேகரிச்சு வச்சிருக்காங்க...
""அதிலும், நாஞ்சில் மனோகரன் காலத்துல இருந்து பி.ஏ.,வா இருந்துட்டு வர்ற, தற்போதைய வருவாய் துறை அமைச்சரின் பி.ஏ., சின்னிகிருஷ்ணன், முதல்வர்கிட்ட வாங்கிய நோட்டுகளை எல்லாம் பத்திரமா பாதுகாத்துட்டு இருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.
""சரி... அடுத்த தடவை, கருணாநிதியே முதல்வரா வந்தா, இதைச் சொல்லியே, பதவி நீட்டிப்பு வாங்கலாம்னு, "ஐடியா' வச்சிருக்காரோ, என்னவோ...'' என, "கமென்ட்' அடித்தார்
குப்பண்ணா.
""தொகுதி நிர்வாகிகளை நியமிக்க முடிவு எடுத்திருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.
"" எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
""காங்கிரஸ் கட்சியில, கோஷ்டிப் பூசல் காரணமா, மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க முடியாத நிலை இருக்கு ஓய்... சட்டசபை தேர்தல் நேரத்துல நிர்வாகிகளை நியமிச்சா, அதிருப்தி ஏற்பட்டு தேர்தல் பணி பாதிக்கும்னு நினைக்கறா...
""அதனால, தேர்தலையொட்டி தொகுதி நிர்வாகிகளை நியமிக்க முடிவு செஞ்சிருக்கா... இதிலும் கோஷ்டி விவகாரம் வெடிக்க வாய்ப்பிருக்கு... அதனால, மேலிட தலைவர் முன்னிலையில, அனைத்து கோஷ்டி தலைவர்களையும் கூட்டி, ஆலோசனை நடத்தியதுக்கு அப்பறம் அறிவிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
""அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை காலி பண்ண எதிர்கோஷ்டிகாரங்க தவறான தகவலை பரப்பிருக்காங்க பா...'' என கடைசி மேட்டரில் நுழைந்தார் அன்வர்பாய்.
""எந்த எம்.எல். ஏ.,ங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
""திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ., அரி, தன் தொகுதி வேலைகளை ஆளுங்கட்சிக்காரங்களுக்கு கொடுக்கறதா, ஒரு கோஷ்டி புகார் எழுப்பியது சம்பந்தமா நாம பேசினோமே பா...
""தொகுதி வேலைகளை கட்சிக்காரங்களுக்குத்தான் எம்.எல்.ஏ., கொடுத்திருக்கார்... கட்சித் தலைமையின் அனுமதியோட தான், ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கார்... "எதிர்கோஷ்டியினர் தொடர்ந்து தவறான தகவலை பரப்பியிருக்காங்க'ன்னு எம்.எல்.ஏ., தரப்பில சொல்றாங்க பா...'' எனச் சொல்லி முடித்து புறப்பட்டார் அன்வர்பாய்; பெஞ்சில் அமைதி திரும்பியது.