சூப்பர் பக் அடைமொழி : மன்னிப்பு கேட்டது பிரிட்டிஷ் பத்திரிகை
பெங்களூரு : சூப்பர் பக் மெட்டல்லோ பீடா லாக்டமேஸ் - 1, எனும் கிருமிக்கு இந்திய தலைநகர் புதுடில்லி அடைமொழியை அளித்ததற்கு பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை "தி லான்சட்" ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன் வருத்தம் தெரிவித்துள்ளார். சூப்பர் பக் கிருமிக்கு அப்படியொரு அடைமொழி வழங்கியது மிகப்பெரிய தவறு என்று அவர் கூறியுள்ளார். மேலும் அப்படி ஒரு அடைமொழி வழங்கப்பட்டதால் சர்வதேச அளவில் அது ஏற்படுத்திய தாக்கத்துக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
சூப்பர் பக் கிருமி பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஆழமானது ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட அடைமொழி மட்டும் தான் தவறானது. தவறான அடைமொழியை சூட்டியதால் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சூப்பர் பக் ஆராய்ச்சி கட்டுரையின் மீதான கவனம் திசைமாறிப் போனது என்றார்.

0 comments:
Post a Comment