Monday, January 31, 2011

அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாறும் தேர்தல் களம்

ட்டசபைத் தேர்தலுக்கான இட பங்கீட்டு தொடர்பான தேர்தல் வியூகத்தை மற்ற அரசியல் கட்சிகளை அசர வைக்கும் நிலையில் அ.தி.மு.க., வகுத்துள்ளது. இதனால், கூட்டணி அமைவதற்கான இறுதி கட்டத்தில், தேர்தல் களம் திசை மாறும் என கருதப்படுகிறது.

அ.தி.மு.க., அணியில் தற்போது உள்ள கட்சிகளுடன், நடிகர் கார்த்திக்கின், "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' இணைந்துள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
முரண்டு பிடித்தால் மூன்றாவது அணிதான் : தென் மாவட்டங்களில் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக, புதிய தமிழகம், சேதுராமன் தலைமையிலான மூ.மு.க., கார்த்திக் கட்சி ஆகியவற்றை தன் கூட்டணியில் ஜெயலலிதா சேர்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அ.தி.மு.க., பலமாக உள்ளது. இந்நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.,வுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அ.தி.மு.க., பக்கம் வந்தால், மொத்த தொகுதிகளையும் அள்ளிவிடலாம் என அ.தி.மு.க., கணக்கு போடுகிறது. சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுதால், அங்கும் அ.தி.மு.க., பலமாக உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் துணையோடு அதிக தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்ற முடியும். இந்நிலையில், மீதமுள்ள வடமாவட்டங்களில் வெற்றி பெற பா.ம.க.,வின் துணை கிடைத்தால் போதுமானது. பா.ம.க.,விற்கு அதிக பட்சம் 35 இடங்களை ஒதுக்கினால் வெற்றி எளிதாகி விடும் என்ற யோசனையும் அ.தி.மு.க.,விடம் உள்ளது.இந்த அரசியல் சூழலை புரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு நிபந்தனைகளை விதித்து, தே.மு.தி.க., தொடர்ந்து முரண்டு பிடிக்குமானால், அது மூன்றாவது அணி உருவாக காரணமாய் அமைந்துவிடும்.