Friday, April 1, 2011

தன்னிலை

பயங்கள் தன்
சாயல்கள், பரிமாணங்கள்
என யாவையும்
தூரவே வைத்து இருந்தது
தொட முடியாத் தொலைவொன்றில் .

எதிர்பார்ப்பின் சாதாரண
பிரதிபலிப்பு கூட
சலனங்களை காட்ட முடியாது
தோல்வி முகம் தழுவியது

வேஷங்கள்
முகமூடிகள்...
என எவைக்கும்
தேவை இருக்கவில்லை

எந்தவித அவசரமோ
இல்லை ஆர்பாட்டமோ
எல்லாவற்றையும் துறந்த
துறவு நிலை

என்ன...
புழுக்கம் மிகுந்து அடைபட்டு கிடக்கையில்
எல்லோரும் என்னை "பிணம்" என்கிறார்கள்...
வீட்டை "கல்லறை" எனவும்...

new vikatan